Poo Pookum Song Lyrics

பூப்பூக்கும் ஓசை பாடல் வரிகள்

Minsara Kanavu (1997)
Movie Name
Minsara Kanavu (1997) (மின்சார கனவு)
Music
A. R. Rahman
Singers
Malaysia Vasudevan, Sujatha Mohan
Lyrics
Vairamuthu
பூப்பூக்கும் ஓசை
அதைக் கேட்கத்தான் ஆசை
புல் விரியும் ஓசை
அதைக் கேட்கத்தான் ஆசை
பட்சிகளின் கூக்கூக்கூ
பூச்சிகளின் ரிங் ரிங் ரிங்
சங்கீதம் சொல்லித்தருமே தங்கப்பெண்ணே
காலோடு சலங்கை பூட்டி
கரையெல்லாம் வீணை மீட்டி
நதிபாடும் பாடல் கேளாய் பட்டுப்பெண்ணே
பூமி ஒரு வீணை
இதைக் காற்றின் கைகள் மீட்டுதே
கேட்கும் ஒலியெல்லாம்
அட சரிகமபதநிசரி....

(பூப்பூக்கும் ஓசை)

கண்தூங்கும் நேரத்தில்
மௌளனத்தின் ஜாமத்தில்
கடிகாரச் சத்தம் சங்கீதம்
கண்காணா தூரத்தில்
சுதிசேரும் தாளத்தில்
ரயில் போகும் ஓசை சங்கீதம்
பசிகொண்ட நேரம் தாளிக்கும் ஓசை... (இசை)
பசிகொண்ட நேரம் தாளிக்கும் ஓசை
சந்தோஷ சங்கீதம்
தாலாட்டும் அன்னைக்கெல்லாம்
தங்கள் பிள்ளை மார்பை முட்டி
பாலுண்ணும் சத்தம் சங்கீதம்

குழு:
ஹில்கோரே ஹில்கோரே
ஹில்கோரே ஹில்கோரே
மங்கலாரே பங்கலாரே
கொரே கொரே பைய்யா
ஹில்கோரே ஹில்கோரே
ஹில்கோரே ஹில்கோரே
ஜங்கலாரே ஜங்கலாரே
தூமீராதே தைய்யா

(பூப்பூக்கும் ஓசை)

சிட்சிட்டுக் குருவிகளும்
சில்லென்று நீராடி
சிறகுலர்த்தும் ஓசை சங்கீதம்...
கரைகொண்ட பாறைமேல்
கடல் பொங்க அலைவந்து
கைதட்டும் ஓசை சங்கீதம்
காற்றோடு தென்னை அசைகின்ற ஓசை... (இசை)
காற்றோடு தென்னை அசைகின்ற ஓசை
சிங்கார சங்கீதம்....
முத்தாடும் நீரின் மேலே
தத்தித் தத்தித் தாவிச் செல்லும்
தவளைக்கள் ஓசை சங்கீதம்

குழு:
ஹில்கோரே ஹில்கோரே
ஹில்கோரே ஹில்கோரே
மங்கலாரே பங்கலாரே
ஜோரி ஜோரி பைய்யா
ஹில்கோரே ஹில்கோரே
ஹில்கோரே ஹில்கோரே
ஜங்கலாரே ஜங்கலாரே
தூமீராதே தைய்யா

(பூப்பூக்கும் ஓசை)

பெண்:
ஹில்கோரே ஏஏஏஏ
ஹில்கோரே ஏஏஏஏ