Annaaththe Aaduraar Song Lyrics

அண்ணாத்த ஆடுறார் பாடல் வரிகள்

Apoorva Sagodharargal (1989)
Movie Name
Apoorva Sagodharargal (1989) (அபூர்வ சகோதரர்கள்)
Music
Ilaiyaraaja
Singers
S. P. Balasubramaniam
Lyrics
Vaali
அண்ணாத்த ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ
தென்னாட்டு வேங்கதான் ஒத்துக்கோ ஒத்துக்கோ
காட்டோரம் மேயும் குறும்பாடு அத
போட்டாத்தான் நமக்குச் சாப்பாடு
சீறினா சீறுவேன் கீறினா கீறுவேன்

(அண்ணாத்த)

அட தார தம்பட்டம் தட்டட்டும் கொட்டட்டும் நானாட ஹோய்
தேசம் சிக்கட்டும் சொக்கட்டும் நிக்கட்டும் பூவாரம் போடத்தான்
பாரு முன்னாலும் பின்னாலும் எந்நாளும் வாலாட ஹோய்
யாரும் வம்புக்கும் தும்புக்கும் எங்கிட்டே வாராம ஓடத்தான்
அட போக்கிரி ஆளு நான் மோதினா தூளுதான் நான் பாஞ்சாட ஹோய்
மூக்குதான் மொகறதான் எகிறித்தான் போகுமே நான் பந்தாட ஹோய்
கில்லாடி ஊரிலே யாருடா கூறடா.. மல்லாடி பாப்பமா வாங்கடா..
ஒரு துப்பாக்கி கையில் எடுக்காதே எந்த தோட்டாவும் என்ன தொலைக்காதே..

(அண்ணாத்த)

அட பாசம் வெச்சாலே வாலாட்டி நிப்பேனே நாய்போல ஹோய்
மோசம் செஞ்சாலே கொல்லாமல் கொல்வேனே பேய்போல மாறித்தான்
உள்ளம் இப்போதும் எப்போதும் கொண்டேனே பூவாக ஹோய்..
நியாயம் இல்லாத பொல்லாரை சாய்ப்பேனே புலியாக மாறித்தான்
அட ஒத்துனா ஒத்துவே வெட்டுனா வெட்டுவே என் வீராப்பு ஹேய் ஹேய்
ஒத்தைய நின்னு நான் வித்தைய காட்டுவே என் சித்தாப்பு..
வில்லாதி வில்லனும் அஞ்சணும் கெஞ்சணும் வந்திங்கே வந்தனம் சொல்லணும்
ஒரு துப்பாக்கி கையில் எடுக்காதே எந்த தோட்டாவும் என்ன துளைக்காதே..

(அண்ணாத்த)