Baaradha Naattukkinai Song Lyrics

பரதரென்ற எங்கள் முனி பாடல் வரிகள்

Penn (1954)
Movie Name
Penn (1954) (பெண்)
Music
R. Sudharsanam
Singers
M. S. Rajeswari
Lyrics

பரதரென்ற எங்கள் முனி
வகுத்த நாட்டியக் கலையே
ஓர் பதந்தூக்கும் நடராஜன்
அமர்ந்தது எங்கள் தில்லையே......

பாரத நாட்டிற்கிணை பாரத நாடே
பாருலகறியுமே இதற்கில்லை ஈடே..(பாரத)

காவிரி கங்கை யமுனை ஆறுகளிங்கே
கயிலையும் இமயத்தின் எவரெஸ்டு மிங்கே
தேவர் சொல் திருக்குறள் கீதையுமிங்கே
தேனின் இனிய திருவாசகமுமிங்கே...(பாரத)

சிற்பமும் ஓவியமும் சிருவருமறிவார்
பற்பல கலைக்கும் பிறந்த வீடிதுவே
அற்புத நடனத்தில் அரம்பையர் நிகர்வார்
கற்பெனும் விலையில்லாப் பொற்பணியணிவார் (பாரத)

புத்தர் பரமஹம்சர் இங்கவதரித்தார்
கவி காளிதாசன் கம்பனுமிங்கு பெரும்புகழ் படைத்தார்
உத்தமர் காந்திஜிக்கு உலகில் யாருவமை
உயர் கலைக் கோவில்கள் காட்சி கொள் பழமைப் (பாரத)