Kankalai Thoothu Song Lyrics

கண்களை தூது விட்டேன் பாடல் வரிகள்

Murai Maaman (1995)
Movie Name
Murai Maaman (1995) (முறை மாமன்)
Music
Vidyasagar
Singers
Swarnalatha, Vidyasagar
Lyrics
Vaali
கண்களை தூது விட்டேன் தலைவா தலைவா
என் பெண்மையை உன்னிடத்தில் தரவா தரவா

ராமனை தள்ளி வைத்த சீதையும் நான் அல்லவா
மன்னித்து பூ வழங்கு மங்கள பொன் மன்னவா

விண்ணும் மண்ணும் இன்று தொட்டு கொள்ளும் என்று
புத்தம் புது சொர்க்கம் நித்தம் சொந்தமென்று
சொல்லு சொல்லை சொல்லு சொல்லை சொல்லு சொல்லு

கண்களை தூது விட்டேன் தலைவா தலைவா
என் பெண்மையை உன்னிடத்தில் தரவா தரவா

மன்னவனே உன் மடியில் காலமெல்லாம் சாய்ந்திருப்பேன்
கை விளக்க நேரமில்லை கண்ண மணிக்குள் சேர்ந்திருப்பேன்

மன்னவனே உன் மடியில் காலமெல்லாம் சாய்ந்திருப்பேன்
கை விளக்க நேரமில்லை கண் மணிக்குள் சேர்ந்திருப்பேன்

ஏணி மேல் ஏணி கொண்டு வான் வெளியில் பூ பறிப்பேன்
ஏழு ஜென்மம் உள்ளதெல்லாம் இந்த ஜென்மம் வாழ்ந்திருப்பேன்

விண்ணும் மண்ணும் இன்று தொட்டு கொள்ளும் என்று
புத்தம் புது சொர்க்கம் நித்தம் சொந்தமென்று
சொல்லு சொல்லை சொல்லு சொல்லை சொல்லு சொல்லு

கண்களை தூது விட்டேன் தலைவா தலைவா
என் பெண்மையை உன்னிடத்தில் தரவா தரவா

போனதெல்லாம் போகட்டுமே பூ மகளை வாழ விடு
பூ மகளை வாழ வைத்து பொன் மகனே வாழ்ந்து விடு

போனதெல்லாம் போகட்டுமே பூ மகளை வாழ விடு
பூ மகளை வாழ வைத்து பொன் மகனே வாழ்ந்து விடு

கண்களுக்குள் உன்னை வைத்து காப்பதுதான் என் கடமை
கட்டில் என்னும் ராஜ்யத்தில் காதலி நான் உன் அடிமை