Annaiye Annaiye Song Lyrics
அன்னையே அன்னையே பாடல் வரிகள்
- Movie Name
- Apoorva Piravikal (1967) (அபூர்வ பிறவிகள்)
- Music
- S. P. Kodandapani
- Singers
- T. M. Soundararajan
- Lyrics
அன்னையே அன்னையே
எண்ணம் போல் நடக்குமா
தாய் உள்ளம் பொறுக்குமா
சரித்திரம் ஏற்குமா
ஆற்றோரம் வைத்த மரம்
பிழைத்துக் கொண்டதா
அடுத்து வந்த புயலாலே
சாய்ந்து விட்டதா
காற்றோடு வந்த மழை
பெய்து நின்றதா
கண் திறந்து கை கொடுத்துக்
காத்துக் கொண்டதா
கண்டெடுத்த குழந்தை
பிள்ளை கலியை தீர்த்தது
கண் கலங்கி தவித்த நெஞ்சில்
பாலை வார்த்தது
அன்றொரு நாள் நடந்த கதை
நினைவு வந்தது
அரண்மனையில் அந்த உள்ளம்
கோவில் கொண்டது
மூத்த மகன் கோட்டையிலே
நிமிர்ந்து நடந்தான்
இளைய மகன் குடிசையிலே
பணிந்து வளர்ந்தான்