Enna Pada Song Lyrics

என்ன பாடச் சொல்லாதே பாடல் வரிகள்

Aan Paavam (1985)
Movie Name
Aan Paavam (1985) (ஆண் பாவம்)
Music
Ilaiyaraaja
Singers
S. Janaki
Lyrics
Vaali
பெண் : என்ன பாடச் சொல்லாதே
நான் கண்டபடி பாடிப்புடுவேன்

குழு : ……………………..

பெண் : என்ன பாடச் சொல்லாதே
நான் கண்டபடி பாடிப்புடுவேன்
என்ன பாடச் சொல்லாதே
நான் கண்டபடி பாடிப்புடுவேன்

பெண் : அதக் கேட்டா மடையனுக்கும்
ஞானம் பொறந்திடும்
மூடிக் கெடக்கும் பல
கண்ணும் தெறந்திடும்
கேட்டா மடையனுக்கும்

குழு : ஞானம் பொறந்திடும்
பெண் : அட மூடிக் கெடக்கும் பல
குழு : கண்ணும் தெறந்திடும்

பெண் : என்ன பாடச் சொல்லாதே
நான் கண்டபடி பாடிப்புடுவேன்

குழு : ………………

பெண் : தேவாரமும் படிச்சோம்
திருவாசகம் படிச்சோம்
தெரியாம திருக்குறளும்தான்
படிச்சோம்
ஆனான படிப்பை எல்லாம்
அன்னாடம் படிச்சிபுட்டு
புரியாம தெரியாமதான்
முழிச்சோம்
அறிவான ஆத்திச்சூடி
கொடுத்தாளே அவ்வைப்பாட்டி
அதக்கூட பாடி
என்ன கிழிச்சிப்புட்டோம்

குழு : அறிவான ஆத்திச்சூடி
கொடுத்தாளே அவ்வைப்பாட்டி
அதக்கூட பாடி
என்ன கிழிச்சிப்புட்டோம்

பெண் : நாடும் என்னாச்சு
நம்ம ஊரும் என்னாச்சு
அட பேசிபேசித்தான்
நல்ல பொழுதும் போயாச்சு
இந்த தேசம் ரொம்ப மோசம்
இதப் பார்க்கும்போது இப்ப

பெண் : என்னப் பாடச் சொல்லாதே
நான் கண்டபடி பாடிப்புடுவேன்
என்ன பாடச் சொல்லாதே
நான் கண்டபடி பாடிப்புடுவேன்

குழு : …………………………..

பெண் : காம்போதியும் தெரியும்
கல்யாணியும் புரியும்
பொதுவாக நெனச்சதும்
நான் பாட்டெடுப்பேன்
ஆகாத பொழப்பை எல்லாம்
அநியாய நடப்பை எல்லாம்
அஞ்சாம என் பாட்டில்
போட்டுடைப்பேன்

பெண் : நாய் வால நிமிர்த்துறதும்
காக்காய வெளுக்குறதும்
அம்மாடி யாரால ஆகும் இப்போ

குழு : நாய் வால நிமிர்த்துறதும்
காக்காய வெளுக்குறதும்
அம்மாடி யாரால ஆகும் இப்போ

பெண் : பார்க்கப் போனாக்க
நான் பொட்டப் புள்ளத்தான்
அட போட்டிப் போட்டாக்க
ரொம்ப கெட்டப் புள்ளத்தான்
ஒரு வேகம் ஒரு கோபம்
ஒண்ணு சேரும்போது இப்ப

பெண் : என்னப் பாடச் சொல்லாதே
நான் கண்டபடி பாடிப்புடுவேன்
என்ன பாடச் சொல்லாதே
நான் கண்டபடி பாடிப்புடுவேன்

பெண் : அதக் கேட்டா மடையனுக்கும்
குழு : ஞானம் பொறந்திடும்
பெண் : அட மூடிக் கெடக்கும் பல
குழு : கண்ணும் தெறந்திடும்

பெண் : என்னப் பாடச் சொல்லாதே
நான் கண்டபடி பாடிப்புடுவேன்…