Ele Nee Enga Song Lyrics

ஏலே எங்க வந்தே பாடல் வரிகள்

Maya Kannadi (1994)
Movie Name
Maya Kannadi (1994) (மாயக் கண்ணாடி )
Music
Ilaiyaraaja
Singers
Ilaiyaraaja
Lyrics
ஏலே எங்க வந்தே வா வா எப்ப வந்தே
ஏலே அட எங்க வந்தே வா வா எப்ப வந்தே
சினிமாவுல சேர போறீயா
கட்டிப்புடிச்சு காதல் டூயட் பாட போறீயா
வெற்றிக்கொடி நாட்ட போறீயா
ரசிகர் மன்றம் ஊருக் ஊரு கூட்ட போறீயா
உன்னைப்போலே நம்பிக்கையில் இங்க வந்து
உள்ளவர்கள் கதை எத்தனை
ஏலே எங்க வந்தே வா வா எப்ப வந்தே
ஏலே அட எங்க வந்தே வா வா எப்ப வந்தே

உள்ளத்திலே தில்லிருந்தா முன்னே வாடா
வெள்ளித்திரை எத்துக்கொள்ளும் மேலே போடா
உள்ளத்திலே தில்லிருந்தா முன்னே வாடா
வெள்ளித்திரை எத்துக்கொள்ளும் மேலே போடா
முடிஞ்சா மார்கெட்டு பிச்சிக்கிடும் நூறடி கட் அவுட்டு வச்சிக்கிடும்
முடிஞ்சா மார்கெட்டு பிச்சிக்கிடும் நூறடி கட் அவுட்டு வச்சிக்கிடும்
சம்பளத்த எத்திக்க நீ பெருசா சிவப்பு கம்பளத்த விரிச்சிடும் புதுசா
ஏஹே முயற்சியும் இல்லாமல் சரக்கும் இல்லாமல்
முன்னுக்கு வந்தவர்கள் யாருமில்லே
ஏலே எங்க வந்தே வா வா எப்ப வந்தே
ஏலே அட எங்க வந்தே வா வா எப்ப வந்தே

மேக் அப்புல எல்லாத்தையும் மாத்திக்கலாம்
கெட் அப்புல செடப்பாக காட்டிக்கலாம்
மேக் அப்புல எல்லாத்தையும் மாத்திக்கலாம்
கெட் அப்புல செடப்பாக காட்டிக்கலாம்
கால்ஷீட்டு கேக்கும் கூட்டம் சுத்தும் சுத்தும்
ப்ளாக்கில டிக்கெட் போகும் எக்கசக்கம்
கால்ஷீட்டு கேக்கும் கூட்டம் சுத்தும் சுத்தும்
ப்ளாக்கில டிக்கெட் போகும் எக்கசக்கம்
ஊர் முழுக்க உன்னுடைய போஸ்டர்
எவனும் ஓவர்டேக்கு பண்ணுவானா மாஸ்டர்
ஏஹே உனக்கின்னு வச்ச எடம் இன்னொருத்தன் வந்து
இங்கு உட்காரத்தான் ஆண்டவன் விட்டதில்லே
ஏலே எங்க வந்தே வா வா எப்ப வந்தே
ஏலே அட எங்க வந்தே வா வா எப்ப வந்தே
சினிமாவுல சேர போறீயா
கட்டிப்புடிச்சு காதல் டூயட் பாட போறீயா
வெற்றிக்கொடி நாட்ட போறீயா
ரசிகர் மன்றம் ஊருக் ஊரு கூட்ட போறீயா
உன்னைப்போலே நம்பிக்கையில் இங்க வந்து
உள்ளவர்கள் கதை எத்தனை
ஏலே அட எங்க வந்தே வா வா எப்ப வந்தே
ஏலே எங்க வந்தே வா வா எப்ப வந்தே