Kaadhal Bali yaagi Song Lyrics

காதல் பலி ஆகி நீயும் பாடல் வரிகள்

Manthiri Kumari (1950)
Movie Name
Manthiri Kumari (1950) (மந்திரி குமாரி)
Music
G. Ramanathan
Singers
M. L. Vasanthakumari
Lyrics
காதல் பலி ஆகி நீயும் தியாகத்தின் சின்னமாய்
நாட்டினர் நெஞ்சிலே ஓவியமே ஆகினாய்
காண்பவர் யாருமே கண்களின் கீதமே
உணர்ந்திட நீயுமே ஓவியமே ஆகினாய்


தீயோன் மேல் காதல் கொண்டே இல்லற வாழ்விலே
தீராத துயரம் கண்டாய் வீண் பழி மேவினாய்
தேசம்தன்னையே பாதுகாக்கவே
தேசம் தன்னையே பாதுகாக்கவே
நாதனை கொன்றுமே நீதிதனை நாட்டினாய்


நாட்டுக்கே பாடம் தந்து போதிக்கும் தியாக சின்னம்
நாளும் உன் கல்லறை மீதில் நாங்களும்
கண்ணீர் சிந்தி மலர்கள் தூவியே மானசீகமாய்
மலர்கள் தூவியே மானசீகமாய்
அன்பு செய்வதன்றியே கைம்மாறு வேறில்லையே

காதல் பலி ஆகி நீயும் தியாகத்தின் சின்னமாய்
நாட்டினர் நெஞ்சிலே ஓவியமே ஆகினாய்