En Kadhal Kanavil Song Lyrics

எனது காதல் கனவில் பாடல் வரிகள்

My Dear Lisa (1987)
Movie Name
My Dear Lisa (1987) (மை டியர் லீசா)
Music
Raghu Kumar
Singers
K. J. Yesudas
Lyrics
Gangai Amaran
எனது காதல் கனவில் மலர்ந்த தேன் பூவே 
இளமை அழகில் கவிதை எழுதும் மான் நீயே 
ஸ்ருதி லயம் எனக் கூடும் 
ஸ்வரங்களில் சுகம் பாடும் கவிதையே வா இங்கே

எனது காதல் கனவில் மலர்ந்த தேன் பூவே 
இளமை அழகில் கவிதை எழுதும் மான் நீயே

வர்ணங்கள் வந்தாடும் பொன் வானமே 
பொன்னாரம் சூடாத பூ மேகமே 
நான் இன்று பாடாத சங்கீதமே ம்ஹூம் ம்ஹூம் 
என் தேவியே....

ராகங்கள் வந்தாடும் சங்கீதமே 
நாள் தோறும் என் நெஞ்சில் உன் மோகமே 
நானென்றும் நீயென்றும் வேறில்லையே ம்ஹூம் ம்ஹூம் 
என் தேவியே....

எனது காதல் கனவில் மலர்ந்த தேன் பூவே 
இளமை அழகில் கவிதை எழுதும் மான் நீயே 
ஸ்ருதி லயம் எனக் கூடும் 
ஸ்வரங்களில் சுகம் பாடும் கவிதையே வா இங்கே

எனது காதல் கனவில் மலர்ந்த தேன் பூவே 
இளமை அழகில் கவிதை எழுதும் மான் நீயே