Sernthu Vazhum Neram Song Lyrics
சேர்ந்து வாழும் நேரம் பாடல் வரிகள்
- Movie Name
- Thodarum (1999) (தொடரும்)
- Music
- Ilaiyaraaja
- Singers
- Arivumathi
- Lyrics
- Ilaiyaraaja
சேர்ந்து வாழும் நேரம் பிரிந்து போவதா
பிரிந்து சென்று நீயும் வருந்தி வாழ்வதா
தொடங்காத உன் வாழ்க்கைப் பயணம்
அது எவ்வாறு இன்றோடு முடியும்
இதை எண்ணிப் பாரு மானே.....(சேர்ந்து)
ஓர் நெய்விளக்கை ஏற்றி வைத்து
நோன்பிருந்து அங்கே
சுமந்தே இருந்தாய் செல்லப் பிள்ளையே
பொய் விளக்கைதான் பிடித்து போகும் வழி எங்கே
உனக்கே தெரியும் உண்மை இல்லையே
இது கொடிய மழையோடு
புயலும் விளையாடும் நேரமே
இங்கு சிறிது இளைப்பாறி
பயணம் தொடர்ந்தாக வேண்டுமே
உன் வழிக்கு துணை எல்லாம்
வாழ்க்கைத் துணைவனே மயிலே..(சேர்ந்து)
ஓ... வெண் திரையை போட்டு விட்டு
நாடகத்தை ஆடும்
இறைவன் விருப்பம் என்ன என்னவோ
உண்மை தனை மூடி வைத்து
நீ நடத்தும் கோலம்
தலைவன் அறிந்தால் துன்பம் அல்லவோ
சிறு அல்லிக் கொடி ஒன்று
கள்ளிச் செடியாகிப் போகுமா
நல்ல முல்லை மனம் ஒன்று
பாலை வனமாகிப் போகுமா
இது உனது லீலையா
இல்லை விதியின் வேலையா சொல்..(சேர்ந்து)