Chinna Vanna Song Lyrics

சின்ன சின்ன பாடல் வரிகள்

Mouna Ragam (1986)
Movie Name
Mouna Ragam (1986) (மௌன ராகம்)
Music
Ilaiyaraaja
Singers
S. Janaki
Lyrics
Vaali
சின்னச் சின்ன வண்ணக் குயில்
கொஞ்சிக் கொஞ்சி கூவுதம்மா
புரியாத ஆனந்தம்
புதிதாக ஆரம்பம்
புரியாத ஆனந்தம்
புதிதாக ஆரம்பம்
பூத்தாடும் தேன் மொட்டு நானா நானா

சின்னச் சின்ன வண்ணக் குயில்
கொஞ்சிக் கொஞ்சி கூவுதம்மா

மன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை சூடிக் கொண்டேன்
மன்மதன் பாடல் ஒன்று நெஞ்சுக்குள் பாடிக் கொண்டேன்
சொல்லத் தான் எண்ணியும் இல்லையே பாஷைகள்
என்னவோ ஆசைகள் எண்ணத்தின் ஓசைகள்

மாலை சூடி ம்ம்ம்..
மஞ்சம் தேடி ம்ம்ம்..

மாலை சூடி ம்ம்ம்..
மஞ்சம் தேடி ம்ம்ம்..

காதல் தேவன் சன்னிதி
காண காணக் காண காண…

சின்னச் சின்ன வண்ணக் குயில்
கொஞ்சிக் கொஞ்சி கூவுதம்மா
புரியாத ஆனந்தம்
புதிதாக ஆரம்பம்
புரியாத ஆனந்தம்
புதிதாக ஆரம்பம்
பூத்தாடும் தேன் மொட்டு நானா நானா

சின்னச் சின்ன வண்ணக் குயில்
கொஞ்சிக் கொஞ்சி கூவுதம்மா

மேனிக்குள் காற்று வந்து மெல்லத் தான் ஆடக் கண்டேன்
மங்கைக்குள் காதல் வெள்ளம் கங்கை போல் ஓடக் கண்டேன்
இன்பத்தின் எல்லையோ இல்லையே இல்லையே
அந்தியும் வந்ததால் தொல்லையே தொல்லையே

காலம் தோறும் ம்ம்..
கேட்க வேண்டும் ம்ம்..

காலம் தோறும் ம்ம்..
கேட்க வேண்டும் ம்ம்..

பருவம் என்னும் கீர்த்தனம்
பாட பாடப் பாட பாட

சின்னச் சின்ன வண்ணக் குயில்
கொஞ்சிக் கொஞ்சி கூவுதம்மா

புரியாத ஆனந்தம்
புதிதாக ஆரம்பம்
புரியாத ஆனந்தம்
புதிதாக ஆரம்பம்
பூத்தாடும் தேன் மொட்டு நானா நானா

சின்னச் சின்ன வண்ணக் குயில்
கொஞ்சிக் கொஞ்சி கூவுதம்மா

சின்னச் சின்ன வண்ணக் குயில்
கொஞ்சிக் கொஞ்சி கூவுதம்மா