Sokki Poraandi Song Lyrics

சொக்கிப் போறான்டி பாடல் வரிகள்

Mupparimanam (2017)
Movie Name
Mupparimanam (2017) (முப்பரிமானம்)
Music
G. V. Prakash Kumar
Singers
Al Rufian, Maalavika Sundar
Lyrics
சொக்கிப் போறான்டி வெட்கிப்போறான்டி     
உன் கண்ணுக்குள் விழுந்தானே நூறுதரம்     
செக்கச்செவ்வானம் வெட்கப்படும்போது     
உன் கண்ணத்தை கடன் வாங்க ஓடி வரும்     
     
கொத்தோடு கிளையோடு பூப்பூக்கும் வாசம் போல்     
காத்தோடு உன் சுவாசம் தேடிப்போறேன்     
குலசாமி திரு நீரு வெச்சாலும் சிலிர்க்காம     
நீத்தொட்டா அங்கங்க சிலிர்த்துப்போறேன்     
     
உன் கண் ஜாடை அசைவுக்கும்      
கால் கொலுசு நெலிவுக்கும்     
அடி போடி பெண்ணே கொடைசாஞ்சுப்போனேன்     
நீ பார்க்காத நேரத்தில் நான் உன்னப்பார்த்துதான்     
நீ பார்க்கும் போது அலைபாஞ்சுப்போறேன்     
     
ஏ தீக்குச்சி தலமேல பாரத்தப்போல     
என் நெஞ்சோடு ஒரு பாரம் தந்தாயடா     
என் தூக்கத்தப்பல நாளா நீ வாங்கிப்போறாயே     
படுத்தாலும் கனவோடு வந்தாயடா……      (சொக்கி)
     
ஏ பஞ்சாரத்து வெடக்கோழிப்போல     
என் நெஞ்சோரம் வாசம் துள்ளுதோடி     
ஏ பஞ்சாங்கத்தில் நாள் பார்க்கச்சொல்லி     
உன் கண்ணோரம் கதைப்பேசி சொல்லுதோடி     
     
ஏ காதோரத்தில் ஒரு பிச்சி வந்து     
தினம் உன் பேர சொல்லித்தான் கூவுதடா     
ஏ தொடுந்தூரத்தில் நீ வரும்போதெல்லாம்     
நான் விடும் மூச்சில் அணலாக கொல்லுதடா     
     
பஞ்சால மேல தான் தீ மூட்டிப்போறியே     
அய்யய்யய்யோ அங்கங்க எரியுதடி     
அஞ்சாறு முத்தத்த நீத்தந்து போனினா      (சொக்கி)
     
ஹேய் உன் கூடத்தான் தினம் தனியாவே தான்     
அட நாம் வாழும் வரம் ஒன்று வேணுமடா     
ஹே உன் மார்பில்தான் இரு கண்மூடித்தான்     
அட நான் தூங்க இடம்மொன்னு வேணுமடா     
     
ஹே ஆகாசத்தில் ஒரு மெத்த போட்டு     
அங்க உன் கூட வெளையாட தோனுதடி     
ஏ ஆனந்தத்தில் என் காலு ரெண்டும்     
அடி என் பேச்சக்கேட்காமல் துள்ளுதடி     
     
கடிகாரம் இல்லாம நொடி நேரம் ஓடாம     
இங்கேயே இப்போதே நின்றால் என்ன     
மடி மீது நான் சாய தாயாக நீ மாறி     
தாலாட்டி பாட்டொன்று சொன்னால் என்ன  (சொக்கி)