Ore Oru Oorilae Song Lyrics

ஒரே ஒரு ஊரிலே பாடல் வரிகள்

Abhiyum Naanum (2008)
Movie Name
Abhiyum Naanum (2008) (அபியும் நானும்)
Music
Vidyasagar
Singers
Kailash Kher
Lyrics
ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ஐய்யா
ஒரே ஒரு ஐய்யாவுக்கு ஒரே ஒரு அம்மா
ஒரே ஒரு அம்மா பெத்தா ஒரே ஒரு பொண்ணு
அவ பொண்ணுயில்ல பொண்ணுயில்ல கடவுளோட கண்ணு

ஐயா இருக்காரே ஐயா

பாசம் இல்லாம பலரு பைத்தியமா ஆனதுண்டு
பாசத்தினாலே இவரு பைத்தியமாவதுண்டு
காத்தடிச்சா மகளுக்கு காவலுக்கு நிப்பாரு
காய்ச்சடிச்சா சூரியனை கைது செய்ய பாப்பாரு
மக மட்டும் மக மட்டும் உசுரு...
மத்ததெல்லாம் மத்ததெல்லாம் இவருக்கு கொசுரு

ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ஐய்யா
ஒரே ஒரு ஐய்யாவுக்கு ஒரே ஒரு அம்மா
ஒரே ஒரு அம்மா பெத்தா ஒரே ஒரு பொண்ணு
அவ பொண்ணுயில்ல பொண்ணுயில்ல கடவுளோட கண்ணு


அக்கா இருக்காங்களே எங்க அக்கா

பூச்சிய பாத்தாலே சிலரு புத்தி மாறி போவாங்க
பூகம்பமே வந்தாலும் அக்கா பூத்தொடுத்து நிம்பாங்க
கொண்டதுவும் ஒரு குழந்தை கொடுத்ததும் ஒரு குழந்தை
தொலையட்டும் கழுதையின்னு தொல்லையெல்லாம் பொறுப்பாங்க
எங்க அக்கா எங்களுக்கு பரிசு
எங்க அக்கா மனசோட இமயமலை சிறுசு

அம்மா இருக்காளே எங்க அம்மா

பொறந்து வரும் போதே சிலரு வரம் வாங்கி வருவாங்க
பொறந்து வரும் போதே சிலரு வரம் தரவே வருவாங்க
வரமா வந்தம்மா வாஞ்சை உள்ள தங்கம்மா
சித்தெரும்ப நசுக்காத சிங்கந்தான் எங்கம்மா
மறு பிறவி உண்டுன்னா எனக்கென்ன வேணும்
இந்த மகளுக்கோ தாய்க்கோ நான் மகனாகவேணும்

ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ஐய்யா
ஒரே ஒரு ஐய்யாவுக்கு ஒரே ஒரு அம்மா
ஒரே ஒரு அம்மா பெத்தா ஒரே ஒரு பொண்ணு
அவ பொண்ணுயில்ல பொண்ணுயில்ல கடவுளோட கண்ணு