Oorellam Un Song Lyrics

ஊரெல்லாம் உன் பாடல் வரிகள்

Oorellam Un Pattuthan (1991)
Movie Name
Oorellam Un Pattuthan (1991) (ஊரெல்லாம் உன் பாட்டு)
Music
Ilaiyaraaja
Singers
K. J. Yesudas
Lyrics
Vaali
ஊரெல்லாம் உன் பாட்டுதான் உள்ளத்தை மீட்டுது
நாளெல்லாம் உன் பார்வைதான் இன்பத்தை கூட்டுது
நீயல்லால் தெய்வம் வேறெது நீயெனை சேரும் நாளெது
ஓகோ ஊரெல்லாம் உன் பாட்டுதான் உள்ளத்தை மீட்டுது
நாளெல்லாம் உன் பார்வைதான் இன்பத்தை கூட்டுது

***

ஆண் : உன் பெயர் உச்சரிக்கும் உள்ளம் நித்தமும் தத்தளிக்கும்
இங்கு நீயில்லாது வாழ்வில் ஏது வேனிற்காலம் தான்
என் மனம் உன் வசமே கண்ணில் என்றும் உன் சொப்பனமே
விழி காணும் காட்சி யாவும் உந்தன் வண்ண கோலம் தான்
ஆலம் விழுதுகள் போலே ஆடும் நினைவுகள் கோடி
ஆடும் நினைவுகள் நாளும் வாடும் உனதருள் தேடி
இந்த பிறப்பிலும் எந்த பிறப்பிலும் எந்தன் உயிர் உனை சேரும்

ஊரெல்லாம் உன் பாட்டுதான் உள்ளத்தை மீட்டுது
நாளெல்லாம் உன் பார்வைதான் இன்பத்தை கூட்டுது

***

ஆண் : சென்றது கண்ணுறக்கம் நெஞ்சில் நின்றது உன் மயக்கம்
இங்கு ஓய்வதேது தேய்வதேது உந்தன் ஞாபகம்
உன்னிடம் சொல்வதற்கு எண்ணம் ஒன்றல்ல நூறிருக்கு
அதை நீயும் கேட்க நானும் சொல்ல ஏது வாசகம்
பாத சுவடுகள் போகும் பாதை அறிந்திங்கு நானும்
கூட வருகின்ற போதும் கூட மறுப்பதோ நீயும்
உள்ளக் கதவினை மெல்ல திறந்திங்கு
நெஞ்சில் இடம் தர வேண்டும்