Vaadipatti Sandhaiyile Song Lyrics

வாடிப்பட்டி சந்தையிலே வாங்கினேன் பாடல் வரிகள்

Namma Ooru Nayagan (1988)
Movie Name
Namma Ooru Nayagan (1988) (நம்ம ஊரு நாயகன்)
Music
Rajesh Khanna
Singers
T. K. S. Nadarajan, Chaya
Lyrics
Rajesh Kanna
வாடிப்பட்டி சந்தையிலே வாங்கினேன் ரெண்டு காள மாடு
ஏரப் பூட்ட போகையிலே ஒத்த மாட்ட காணலையே
அடி என்னடி நான் செய்வேன் எத நெனச்சு அழுவேன்
தொண்டைக்குள்ள துக்கம் இப்ப அடைக்குது ஒரு பக்கம்

மனச விட்டுடாதே மச்சான் மாடு போனா போகட்டுமே
மவராசா நீயிருந்தா மாடு நூறு வாங்கிக்கலாம்
என்னப் பாரு மாமா நீ இதுக்கு அழுவலாமா
நுகத்தடிய நான் புடிச்சா ஏர உழு மாமா

காஞ்சு கெடக்குதடி வயலு கருவாடா போச்சுதடி
பேஞ்ச மழை எல்லாம் இந்த பூமிக்கே சரியாச்சுதடி
அடி என்னடி நான் செய்வேன் எத நெனச்சு அழுவேன்
தொண்டைக்குள்ள துக்கம் இப்ப அடைக்குது ஒரு பக்கம்

ஊத்துக் கேணி தோண்டிக்குவோம் மச்சான்
ஊறும் தண்ணிய எறச்சுக்குவோம்
பாத்தி கட்டி மச்சான் நாம
பயிரு செஞ்சு பொழைச்சுக்குவோம்
என்னப் பாரு மாமா நீ இதுக்கு அழுவலாமா
ஏரிருக்கு கையிருக்கு வேறெதுக்கு பயம் உனக்கு

வயசு வந்த பொண்ணப் போல வளர்ந்து இருக்கு பயிரு இப்போ
வயதான கெழவன் தலப்போல வெளுத்து தானே போயிடுச்சு
அடி என்னடி நான் செய்வேன் எத நெனச்சு அழுவேன்
தொண்டைக்குள்ள துக்கம் இப்ப அடைக்குது ஒரு பக்கம்

சமஞ்சு இருக்கும் பொண்ணு கூட சதை புடிக்க நாளும் ஆகும்
தூத்தி அடிச்சா பயிரு மச்சான் மருந்து வச்சா சரியா போகும்
என்னப் பாரு மாமா நீ இதுக்கு அழுவலாமா
மருந்த வாங்கு மாமா அதை சேர்ந்தடிப்போம் நாம

அறுக்க ஆளு கெடைக்கலடி புள்ள அடிச்சு தூத்த எடமில்லடி
சுருக்கா முடிச்சுத்தானே டவுனுக்கு கொண்டு போக துணையில்லையே
அடி என்னடி நான் செய்வேன் எத நெனச்சு அழுவேன்
தொண்டைக்குள்ள துக்கம் இப்ப அடைக்குது ஒரு பக்கம்

வெவரமான ஆளு மச்சான் நீயும் வெக்கங்கெட்ட ஆளு மச்சான்
வெவரமான ஆளு மச்சான் நீயும் வெக்கங்கெட்ட ஆளு மச்சான்
சுருக்காத்தானே பரிசம் போட்டா இந்த சிறுக்கி உனக்கு கூட வருவா
தன்னானதானா தனதானானன்னனானா
தன்னானதானா தனதானானன்னனானா
தன்னானதானா தனதானானன்னனானா....