Pattu Poove Song Lyrics

பட்டுப்பூவே உன்னைப் பார்த்தா பாடல் வரிகள்

Naanum Oru Thozhilali (1986)
Movie Name
Naanum Oru Thozhilali (1986) (நானும் ஒரு தொழிலாளி)
Music
Ilaiyaraaja
Singers
S. P. Balasubramaniam
Lyrics
Vaali
பட்டுப்பூவே உன்னைப் பார்த்தா பாட்டுப்பாட ஆசை
தன்னாலே கவி ஆனேன் உன்னாலே
ஓ.. மை ஸ்வீட்டி.. ஓ.. பேத்திங் ப்யூட்டி
ஓ ..மை ஸ்வீட்டி ..ஓ... பேத்திங் ப்யூட்டி

பட்டுப் பூவே உன்னைப் பார்த்தா பாட்டுப்பாட ஆசை

நடையோர் நடனம் இடையோர் நளினம்
நிலவின் ரதி பிம்பம் நீ உலவும் ரதி வம்சம்
இரு புருவமும் கூன்விழும் வான் பிறை
சிறு பனி இதழ் மடல் விடும் தாமரை
உன் பூமேனி பாலாடை அதில் நான் தந்த மேலாடை
அம்மம்மா உன் அங்கம் செந்தங்கம் என் கண் கூசுதே

பட்டுப் பூவே உன்னைப் பார்த்தா பாட்டுப்பாட ஆசை

முழங்கால் அளவு உடையோ குறைவு அடடா அது போதும்
மனக் கடலில் அலை மோதும் இந்த தரிசனம் கிடைத்தது பாக்கியம்
இதை எழுதிட இல்லை ஒரு வாக்கியம்
நீ மூவாறு பதினெட்டு இன்னும் தாண்டாத பூஞ்சிட்டு
அடி யம்மா என் கண்ணும் என் நெஞ்சும் உன் பின்னோடுதே...

பட்டுப்பூவே உன்னைப் பார்த்தா பாட்டுப்பாட ஆசை 

ஹெ...ஹே பா பா பு ...(இசை)
பா பூ பூ பாபா.... பூ பா பா பா பூ ப பா பா....

இனிமேல் ஒருத்தி உனைப்போல் அழகி இயற்கை படைக்காது
அந்த திறமை அதற்கேது அடி உனை விட குறைந்தவள் ஊர்வஸி
உந்தன் அடிமை என்றிருப்பவள் மேனகை
நீ தள்ளாடும் பல்லாக்கு தென்றல் கிள்ளாத பூங்கொத்து
அடி அம்மா என் யோகம் உன் தேகம் என் கண் கொண்டதே

பட்டுப்பூவே உன்னைப் பார்த்தா பாட்டுப்பாட ஆசை
தன்னாலே கவி ஆனேன் உன்னாலே
ஓ மை ஸ்வீட்டி.. ஓ பேத்திங் ப்யூட்டி
ஓ.. மை ஸ்வீட்டி.. ஹூ...ஓ. பேத்திங் ப்யூட்டி ஹு..ஹூ
ஓ.. மை ஸ்வீட்டி..ஹு..ஹூ ஓ.. பேத்திங் ப்யூட்டி..ஹு..