Ooradangum Samathiley Song Lyrics
ஊரடங்கும் சாமத்துல பாடல் வரிகள்
- Movie Name
- Kalavani (2010) (களவாணி)
- Music
- S. S. Kumaran
- Singers
- Na. Muthukumar
- Lyrics
- Na. Muthukumar
ஊரடங்கும் சாமத்துல நான்
ஒருத்தி மட்டும் முழிச்சிருந்தேன்
ஊர் கோடி ஓரத்துல உன் நினப்புல படுத்திருந்தேன்
காத்தடிச்சு சலசலக்கும் ஓலையெல்லாம் உஞ்சிரிப்பு
பொரண்டு படுத்தாலும் பாவிமகன் உன் நினப்பு
பாவி மகன் உன் நினப்பு.
(ஊரடங்கும் சாமத்துல….)
வெள்ளியில தீப்பெட்டியாம்
மச்சானுக்கு வெதவெதமா பீடிக்கட்டா
வாங்கித்தர ஆச வெச்சேன் - காச
சுள்ளி வித்து சேத்து வெச்சேன்
சம்புகனார் கோயிலுக்கு
சூடம் கொளுத்தி வெச்சேன் - போறவங்க வாரவங்க
பேச்சையெல்லாம் கேட்டு வெச்சேன் - நான்
பேச்சையெல்லாம் கேட்டு வெச்சேன்
ஒரு பாக்கு போட்டாலே உள் நாக்கு செவந்திடுமே

ஒம்மேல ஏக்கம் வந்து என் தூக்கமெல்லாம் போச்சு மச்சான்

(ஊரடங்கும்….)
கழனி சேத்துக்குள்ள கள எடுத்து நிக்கையிலே
உன் சொத்த பல்ல போல ஒரு சோழி ஒன்னு கண்டெடுத்தேன்.
கண்டெடுத்த சோழி கண்டு கலங்கி நிக்கையிலே
களையெடுப்பு பிந்துதுன்னு பண்ணையாரு பேசினாரே

கருவேல முள்ளெடுத்து கள்ளி செடியிலெலாம்
உம்பேரு எம்பேரு ஒருசேர எழுதினமே
ஊருணி கரையோரம் ஒக்காந்து பேசினமே
ஊருகாரன் தலைய கண்டு ஓடி நாம ஒளிஞ்சோமே…
ஊருகாரன் தலைய கண்டு ஓடி நாம ஒளிஞ்சோமே…
ஊரு என்ன சொன்னாலும் யாரு வந்து தடுத்தாலும்
உன்னையே சேருவன்னு துண்டு போட்டு தாண்டினியே - அந்த
வார்த்தையில நான் இருக்கேன்… வாக்கப்பட காத்திருக்கேன்…