Yaarukku Yaar Song Lyrics

யாருக்கு யார் பாடல் வரிகள்

Kangaroo (2014)
Movie Name
Kangaroo (2014) (கங்காரு)
Music
Srinivas
Singers
Srinivas
Lyrics
Vairamuthu
யாருக்கு யார் உறவு
யாருக்கு யார் வரவு
யாரிங்கே ஆதரவு
யாதும் இங்கே வீண் கனவு
யாருக்கு யார் உறவு
யாருக்கு யார் வரவு
யாரிங்கே ஆதரவு
யாதும் இங்கே வீண் கனவு
வேருக்கு மண் உறவு
மண்ணுக்கு நீர் உறவு
வாழ்வுக்கு நூறு உறவு
போகும்போது யார் உறவு
யாருக்கு யார் உறவு
யாருக்கு யார் வரவு
யாரிங்கே ஆதரவு
யாதும் இங்கே வீண் கனவு

ஆதியில் வந்த சொந்தங்கள் கூட பாதியில் மாறிவிடும்
பாதியில் வந்த சொந்தங்கள் கூட பாடைக்கு கூட வரும்
வருவதில் அல்ல வாழ்வதில் தானே உறவுகள் மேன்மை படும்
பெத்தது சொந்தமின்னா மத்தது சொந்தமில்ல
எல்லாரும் சொந்தமின்னா இன்பம் துன்பம் எதுமில்ல

யாருக்கு யார் உறவு
யாருக்கு யார் வரவு
யாரிங்கே ஆதரவு
யாதும் இங்கே வீண் கனவு
வேருக்கு மண் உறவு
மண்ணுக்கு நீர் உறவு
வாழ்வுக்கு நூறு உறவு
போகும்போது யார் உறவு