Ponmalar Ingoru Punnagai Song Lyrics

பொன் மலர் இங்கொரு புன்னகை செய்தது பாடல் வரிகள்

Athaimadi Methaiadi (1989)
Movie Name
Athaimadi Methaiadi (1989) (அத்தைமடி மெத்தைமடி)
Music
S. R. Vasu
Singers
K. S. Chitra
Lyrics
Vaali
பொன் மலர் இங்கொரு புன்னகை செய்தது
கண் விழி இன்னொரு
காவியம் எய்தது காலம் கனிந்ததோ

சிற்றிடை கொண்டொரு சித்திரம் வந்தது
செந்தமிழ் பொங்கிட
சிந்துகள் தந்தது பாடல் புனைந்ததோ

கால் கொண்டு கை கொண்டு உலவ
இரு கண்ணோடு மின்னல்கள் குலவ
நடனம் புரியும் பதுமை
இது எங்கேயும் இல்லாத புதுமை
சலங்கை சத்தம் தான் குலுங்கும் நித்தம்தான்
மகிழ்ச்சி வெள்ளம் தான் மலிந்த உள்ளந்தான்

பொன் மலர் இங்கொரு புன்னகை செய்தது
கண் விழி இன்னொரு
காவியம் எய்தது காலம் கனிந்ததோ

சிற்றிடை கொண்டொரு சித்திரம் வந்தது
செந்தமிழ் பொங்கிட
சிந்துகள் தந்தது பாடல் புனைந்ததோ

பநிபநிஸா நிஸநிஸக பநிபநிஸா நிஸநிஸக
ஸாஸநிநி நிநிநி ஸாஸஸாஸக.....
காட்டுக்குள் கூட்டுக்குள் துயர்
பாட்டுக்கள் பாடிய குயில் கூட்டை துறந்ததோ
விண்ணுக்கும் மண்ணுக்கும் அது
கண்ணுக்கு எட்டிய வரை பாடிப் பறந்ததோ

இனி உலகம் முழுதும் தனது
என உலவி திரியும் மனது
இது சுகங்கள் விளையும் பொழுது
இந்த இயற்கை அனைத்தும் அழகு
சலங்கை சத்தம் தான் குலுங்கும் நித்தம்தான்
மகிழ்ச்சி வெள்ளம் தான் மலிந்த உள்ளந்தான்

பொன் மலர் இங்கொரு புன்னகை செய்தது
கண் விழி இன்னொரு
காவியம் எய்தது காலம் கனிந்ததோ

சிற்றிடை கொண்டொரு சித்திரம் வந்தது
செந்தமிழ் பொங்கிட
சிந்துகள் தந்தது பாடல் புனைந்ததோ

பூமிக்குள் மேகங்கள் வர
மேகங்கள் இறங்கல் தர பூக்கள் மலர்ந்ததோ
தூறல் சாரல் என தூவும்
பனித்துளியில் தேகம் சிலிர்த்ததோ

முன்பு இரவும் பகலும் தனிமை
இனி இளமை முழுதும் இனிமை
நெஞ்சை விலகி நடக்கும் கவலை
இனி விழிகள் எழுதும் கவிதை
சலங்கை சத்தம் தான் குலுங்கும் நித்தம்தான்
மகிழ்ச்சி வெள்ளம் தான் மலிந்த உள்ளந்தான்

பொன் மலர் இங்கொரு புன்னகை செய்தது
கண் விழி இன்னொரு
காவியம் எய்தது காலம் கனிந்ததோ

சிற்றிடை கொண்டொரு சித்திரம் வந்தது
செந்தமிழ் பொங்கிட
சிந்துகள் தந்தது பாடல் புனைந்ததோ

கால் கொண்டு கை கொண்டு உலவ
இரு கண்ணோடு மின்னல்கள் குலவ
நடனம் புரியும் பதுமை
இது எங்கேயும் இல்லாத புதுமை
சலங்கை சத்தம் தான் குலுங்கும் நித்தம்தான்
மகிழ்ச்சி வெள்ளம் தான் மலிந்த உள்ளந்தான்

பொன் மலர் இங்கொரு புன்னகை செய்தது
கண் விழி இன்னொரு
காவியம் எய்தது காலம் கனிந்ததோ

சிற்றிடை கொண்டொரு சித்திரம் வந்தது
செந்தமிழ் பொங்கிட
சிந்துகள் தந்தது பாடல் புனைந்ததோ.....