Nila Kayuthu Song Lyrics

நிலா காயுது பாடல் வரிகள்

Sakalakala Vallavan (1982)
Movie Name
Sakalakala Vallavan (1982) (சகலகலா வல்லவன்)
Music
Ilaiyaraaja
Singers
Malaysia Vasudevan, S. Janaki
Lyrics
நிலா காயுது நேரம் நல்ல நேரம்
நெஞ்சில் பாயுது காமன் விடும் பானம்
நிலா காயுது நேரம் நல்ல நேரம்
நெஞ்சில் பாயுது காமன் விடும் பானம்

தூக்கம் வல்ல மாமா காக்க வைக்கலாமா
ஆக்கிவச்ச சோத்த ஆறப் போடலாமா

நிலா காயுது
நேரம் நல்ல நேரம்

நெஞ்சில் பாயுது
காமன் விடும் பானம்

தென்னங் கீற்றும் பூங் காத்தும்
என்ன பண்ணுதோ

உன்னப் போல தோளைத் தொட்டு
பின்னிக் கொள்ளுதோ

தென்னங் கீற்றும் பூங் காத்தும்
என்ன பண்ணுதோ

உன்னப் போல தோளைத் தொட்டு
பின்னிக் கொள்ளுதோ

வெட்கம் பிடுங்குது பொறுத்துக்கையா
அது விலகி போனதும் எடுத்துக்கையா

கட்டில் போட்டதும்
தெரிஞ்சிக்கணும்

கொல்ல பக்கம் ஒதுங்கிட
புரிஞ்சக்கணும்

அம்மாடி அதுக்கென்ன அவசரமோ

நிலா காயுது
நேரம் நல்ல நேரம்

நெஞ்சில் பாயுது
காமன் விடும் பானம்

தண்ணீர் கேட்கும் நேர் கண்டேன்
தாகம் தனிஞ்சதா

அத்தான் தேவை நான் தந்தேன்
ஆசை குறஞ்சுதா

கொட்டிக்கிடக்குது ஊரளவு
இதில் வெட்டி எடுத்தது ஓரளவு

இன்று கொடுத்தது இதுவரைக்கும்
இனி நாளை இருப்பது இருவருக்கும்
அன்பே நீ அதிசய சுரங்கமடி

நிலா காயுது
நேரம் நல்ல நேரம்

நெஞ்சில் பாயுது
காமன் விடும் பானம்

தூக்கம் வல்ல மாமா
காக்க வைக்கலாமா

ஆக்கிவச்ச சோத்த
ஆறப் போடலாமா

நிலா காயுது
நேரம் நல்ல நேரம்

நெஞ்சில் பாயுது
காமன் விடும் பானம்