Iravum Oru Naal Song Lyrics

இரவும் ஒரு நாள் பாடல் வரிகள்

Madhurakara Thambi (1988)
Movie Name
Madhurakara Thambi (1988) (மதுரைக்கார தம்பி)
Music
Chandrabose
Singers
K. J. Jesudass
Lyrics
Mu. Metha
இரவும் ஒரு நாள் விடியும் அதனால்
எழுந்திடுவாய் தோழா
புயலும் புலியும் அழுவது இல்லை
புறப்படுவாய் தோழா

இரவும் ஒரு நாள் விடியும் அதனால்
எழுந்திடுவாய் தோழா....ஆஆஆஆ....
புயலும் புலியும் அழுவது இல்லை
புறப்படுவாய் தோழா....ஆஆஆஆ...

சாவினை எண்ணி தைரியம் இழந்தால்
தாயகம் நமக்கேது..ஆஆஆ....
உலகினை ஜெயிக்கும் நாள் வரை நமது
உறைவாள் உறங்காது...

இரவும் ஒரு நாள் விடியும் அதனால்
எழுந்திடுவாய் தோழா....ஆஆஆஆ....
புயலும் புலியும் அழுவது இல்லை
புறப்படுவாய் தோழா....ஆஆஆஆ...

தேகமும் ஒரு நாள் ஓய்ந்திட கூடும்
தாகங்கள் ஓயாது...ஆஆஆ...
தலைமுறை வாழ தலை தருவோரை
சரித்திரம் மறக்காது

களத்தினில் சொந்தம் பார்ப்பதில்லை
லட்சிய வீரன் தோற்பதில்லை
களத்தினில் சொந்தம் பார்ப்பதில்லை
லட்சிய வீரன் தோற்பதில்லை

ஏழைகள் இங்கே கோழைகளானால்
உரிமைகள் கிடைக்காது..ஆஆஆ...
உழைப்பவர் ஒன்றாய் சேர்ந்திடும்போது
ஜெயித்திட ஆளேது

ஊமைகள் பேசும் காலம் வரும்
உயர்த்திய கைகள் வெற்றி பெறும்
ஊமைகள் பேசும் காலம் வரும்
உயர்த்திய கைகள் வெற்றி பெறும்

இரவும் ஒரு நாள் விடியும் அதனால்
எழுந்திடுவாய் தோழா....ஆஆஆஆ....
புயலும் புலியும் அழுவது இல்லை
புறப்படுவாய் தோழா....ஆஆஆஆ...