Oru Ooril Oru Rajah Song Lyrics

ஒரு ஊரில் ஒரு ராஜா பாடல் வரிகள்

Anbu Magan (1961)
Movie Name
Anbu Magan (1961) (அன்பு மகன்)
Music
T. Chalapathi Rao
Singers
P. Susheela
Lyrics
Udumalai Narayana Kavi

ஒரு ஊரில் ஒரு ராஜா ஒரு ராணி
உன்னப் போலே அவங்களுக்கும் ஒரு புள்ள
அதை கண்ண மூடி தூங்க சொன்னா
கதை சொல்லுன்னு கேட்கும்
காலாகாலம் சாப்பிட சொன்னா நான்
கதை சொல்லுன்னு கேட்கும்

அவங்கம்மா சும்மா கதைகள் சொல்லி
அலுத்துப் போய்விட்டாள்
அப்படி இருக்கும்போது ராஜா
வேட்டைக்கு புறப்பட்டார்...ஏம்மா.....

நாட்டு மக்கள் போட்டப் பயிரை
காட்டு மிருகம் அழிச்சுதாம்
ஆட்டைக் கடிச்சு மாட்டைக் கடிச்சு
ஆளையும் கூட கடிச்சுதாம் அப்புறம்...
உடனே ராஜா பட்டத்து குதிரையை
கொண்டு வரச் சொல்லி பாஞ்சாரு மேலே பாஞ்சி....

சல்சலோன்னு சவாரி விட்டார்
டக்டக்டக்டக் டக்டக்டக்டக் ராஜா
சல்சலோன்னு சவாரி விட்டார்
டக்டக்டக்டக்டக்

சவுக்கால் அடித்து லகானை இழுத்து
குதிரையை விட்டாரு ராஜா
சல்சலோன்னு சவாரி விட்டார்
டக்டக்டக்டக்டக்

கல்லும் கரடும் நிறைந்த வழியில்
கேளப் விட்டாரு
கத்தியை உருவி கரம் பிடிச்சி
காட்டிலே நுழைஞ்சாரு ராஜா (சல்சலோன்னு)

வில்லை எடுத்து அம்பை பூட்டி
மழையா பொழிஞ்சாரு
விலங்குகளெல்லாம் வெருண்டே ஓட
சுழன்று வந்தாரு

இடது காலுக்கு சிமிண்டா கொடுத்து
ஈன்னு சொன்னாரு
சிறகில்லாத பறவை போலே
குதிரை பறந்தது பார் ராஜா (சல்சலோன்னு)

கரிகள் வந்தன நரிகள் வந்தன நடுநடுங்கவே
காட்டெருமை கூட்டம் வந்தன கிடுகிடுங்கவே
கரியை பந்திகள் இடிக்க வந்தன
கரடி மந்திகள் கடிக்க வந்தன
கலைமான் முதல் மறையோடிகள்
காணாமல் இடம் பெயர்ந்தன.........(கரிகள்)

கால் ஓடிஞ்சது வால் அறுந்தது கழுத்தொடிஞ்சது
நல்ல காலம் பிறந்தது
கலப்பை பிடித்த உழவர் மனசில்
கவலை ஒழிஞ்சது திரும்ப குதிரை பறந்தது (சல்சலோன்னு)

அப்புறமா.....ராஜாவுக்கு தாகம் எடுத்தது
ஒரு தடாகத்தைப் பார்த்தாரு
தண்ணியில கையை வச்சாரு......

வந்ததே பூதம் வந்ததே வந்ததே பூதம் வந்ததே
மண் மேலே நில்லாமல் மகராஜன் முன்னாலே
தண்ணீரை உண்ணாமல் தடை செய்து மலைபோலே
வந்ததே பூதம் வந்ததே...

இந்தத் தடாகம் என் சொந்தமாகும்
எங்கு வந்தாய் என்று இட்டதே சாபம்
.........???? கிளியாய் காவலர் சிலையாய்
கல்லானது இன்னும் சொல்லோனும்
கதை மிச்சம் சொல்லவா இன்னும் சொல்லவா
சொல்லம்மா......

வேட்டைக்கு போன ராஜா
வீட்டுக்கு சீக்கிரம் வரணும்ன்னு
ராணி கடவுள வேண்டினா.....எப்படி...?

ஆ...ஆ....ஆதரவுனையே அலதினி யாரே
ஆண்டவனே கடைக் கண் பார் என்னை
ஆண்டவனே கடைக் கண் பார்..
நாதன் இல்லாது நான் உயிர் வாழேன்
வேதனை விலக இந்நாளே என்னை
ஆண்டவனே கடைக் கண் பார்.....

அருளாம் ஆண்டவன் பூதம் தன்னை
அக்னியாக்கி ஓட்டினார்
அரசனும் குதிரையும் பூதத்தாலே
அடைந்த சாபம் மாற்றினார்

உறவாம் மகனை ராணியை எண்ணி
உடனே பரிதனில் ஏறி
ஊருக்கு வருகையில் அவருக்கு முன்னே
உள்ளம் வந்தது மீறி

வருவாரென்று வழி மேலே
விழி வைத்திருந்தாள் மகராணி
வந்திட்டாரு என்னும் நினைவில்
வாசல் கதவை திறந்தாள்.........