Kaadhal Inba Vaazhvile Song Lyrics

காதலின்ப வாழ்விலே பாடல் வரிகள்

Penn (1954)
Movie Name
Penn (1954) (பெண்)
Music
R. Sudharsanam
Singers
T. S. Bagavathi
Lyrics

காதலின்ப வாழ்விலே
மின்னாமலே இடி வீழ்ந்ததே
பேதை ஆசைக் கனவிலே
நீங்காத பேரிருள் சூழ்ந்ததே (பேதை)

நாதன் என்னை வெறுத்த பின்னே
நீதியோ நான் வாழ்வதும்
ஜாதி பேதம் பேசிடும்
பொல்லா சமூகப் பேயினால்...(பேதை)

எனது துன்பம் அவர்க்கு இன்பம்
என்னில் அதுவே சம்மதம்
மனது மகிழ்வாய் ஏற்றுக் கொள்வேன்
மரணம் வரினும் இன்பமே.......(பேதை)