Oorellaam Unnai Kandu Song Lyrics

ஊரெல்லாம் உன்னை நயன்தாரா பாடல் வரிகள்

Nanbenda (2015)
Movie Name
Nanbenda (2015) (நண்பேண்டா)
Music
Harris Jayaraj
Singers
Bombay Jayashree, P. Unnikrishnan
Lyrics
Vairamuthu
கண்களோடு இரு கண்களோடு
ஒரு காந்தல் பூத்ததடி பெண்ணே

காற்றிலாடி சிறு காற்றிலாடி
ஒரு காதல் பூத்ததடி கண்ணே

நெஞ்சம் கூடியே இரு நெஞ்சம் கூடியே
ஒரு நேசம் வந்ததடி பெண்ணே

ஒன்று கூடி மனம் ஒன்று கூடி
உயிர் வென்றதடி கண்ணே

நம் த நம் த த ந நம் த நம் த ந நம் தன தம் தம்
நம் த நம் த த ந நம் த நம் த ந நம் தன தம் தம்

ஊரெல்லாம் உன்னை கண்டு வியந்தாரா
உன்னோடு காதல் சொல்லி நயன்தாரா

அன்பே உன் பின்னால் யாரும் அலைந்தாரா
கண்ணிலும் காதல் கண்டு கலைந்தாரா

ஊரெல்லாம் உன்னை கண்டு வியந்தாரா
உன்னோடு காதல் சொல்லி நயன்தாரா

அன்பே உன் பின்னால் யாரும் அலைந்தாரா
கண்ணிலும் காதல் கண்டு கலைந்தாரா

ஊரெல்லாம் என்னை கண்டு வியந்தாரா
என்னோடு காதல் சொல்லி நயன்தாரா

ஒருமுறை உன்னைக் காணும் பொழுது
இரு விழிகளில் ரோஜாக் கனவு

வானத்தை கட்டி வைக்க வழிகள் உண்டு
நாணத்தை கட்டி வைக்க வழிகள் இல்லை

ஒருமுறை உன்னைக் காணும் பொழுது
இரு விழிகளில் ரோஜாக் கனவு

வானத்தை கட்டி வைக்க வழிகள் நாணத்தை கட்டி வைக்க வழிகள் இல்லை

தங்கம் வெட்கப்பட்டால்
மஞ்சள் வண்ணம் மாறும்

நாணம் கொண்ட தாலே உன் வண்ணமே
பொன் வண்ணம் செவ்வண்ணம் ஆச்சு வா

கண்ணாலம் கண்ணும் கலப்போமா
காற்றோடு மேகத் துண்டாய் மிதப்போமா

அப்பப்ப ரெக்கை கட்டி பரப்போமா
ஆகாயம் தாண்டி சென்று வசிப்போமா

துணியினை கொண்டு மார்பை மறைத்தாய்
துணிவினை கொண்டு மனதை மறைத்தாய்

நேற்றோடு என்னைக் கண்டு மலர்ந்து விட்டாய்
காற்றோடு மொட்டை போல உடைந்து விட்டாய்

சிங்கம் கொண்ட பாலை வாங்கி வைப்பதென்றால்
தங்க கிண்ணம் வேண்டும் கண்ணாளா
நான் தானே உந்தன் தங்கக் கிண்ணம் வா

ஊரெல்லாம் உன்னை கண்டு வியந்தாரா
உன்னோடு காதல் சொல்லி நயன்தாரா

அன்பே உன் பின்னால் யாரும் அலைந்தாரா
கண்ணா காதல் கண்டு கலைந்தாரா

ஊரெல்லாம் என்னை கண்டு வியந்தாரா
என்னோடு காதல் சொல்லி நயன்தாரா

அன்பே என் பின்னால் யாரும் அலைந்தாரா
கண்ணா நம் காதல் கண்டு ம் ஹ்ம் ம்