Kelvi Mattum Thanguthey Song Lyrics

கேள்வி மட்டும் தாங்குதே பாடல் வரிகள்

Kolai (2023)
Movie Name
Kolai (2023) (கொலை)
Music
Girish G
Singers
Girish G, Pradeep Kumar
Lyrics
Unknown
சேர்த்த ஆசைகள் எத்தனை? குவித்த கனவுகள் எத்தனை? ஒளித்த ரகசியம் எத்தனை? விட்டு சென்றாய் அத்தனை..

உடலும் மண்ணில் மங்குதே கேள்வி மட்டும் தங்குதே...

செய்த சமரசம் எத்தனை புதைத்த வலிகளும் எத்தனை மறைத்த குற்றங்கள் எத்தனை விட்டு சென்றாய் அத்தனை

அட நாவில் துடிக்கும் கேள்விகள் பதில் கொடுக்க நீயும் இங்கு இல்லையே நெஞ்யை நிறப்பும் உணர்வுகள் கட்டி அனைக்க நீயும் இங்கு இல்லையே

நேரம் நடத்தும் போர்ரிலே உன் ஞாபகங்கள் தேயுதே உனது நினைவின் சுவடுகள் இந்த உலகில் இருந்து மறையுதே பிறிவிலே வரும் காயமா? ஆறுதல் வெறும் மாயமா?

நீயும் பார்த்த பாதைகளில் என் மனமும் போக விரும்புதே. மரணம் அழைக்கும் வரையிலே உன் பிம்பமோ என் இமையிலே

அட நாவில் துடிக்கும் கேள்விகள் பதில் கொடுக்க நீயும் இல்லையே நெஞ்சை நிறப்பும் உணர்வுகள் கட்டி அனைக்க நீயும் இங்கு இல்லையே

நீ இல்லையே நீ இல்லையே

~ நன்றி Sivarranjani