Kadhal Thedi Vazhntha Kalai Song Lyrics

காதல் தேடி வாழ்ந்த காளை பாடல் வரிகள்

Monisha En Monalisa (1999)
Movie Name
Monisha En Monalisa (1999) (மோனிஷா என் மோனாலிஷா)
Music
T. Rajendar
Singers
Lyrics
காதல் தேடி வாழ்ந்த காளை
கை கூடி வந்த வேளை
காதல் தேடி வாழ்ந்த காளை
கை கூடி வந்த வேளை

பார்க்க வந்தால் ரோஜா மாலை

ஆ...ஆ...ஆ...ஆ...

அவ பார்க்கும் முன்னே என்ன லீலை

ஆ...ஆ...ஆ...ஆ...

காதல் செடி... வளர்த்தானம்மா...
பூ பூப்பதையே... பார்க்கலம்மா

காதல் தேடி வாழ்ந்த காளை
கை கூடி வந்த வேளை

பார்க்க வந்தால் ரோஜா மாலை

ஆ...ஆ...ஆ...ஆ...

அவ பார்க்கும் முன்னே என்ன லீலை

ஆ...ஆ...ஆ...ஆ...

காதல் வரத்தை கேட்டு பார்த்தான் கொடுக்கவேஇல்லை
காளை முகத்தை கடைசிவரை அவ பார்க்கவே இல்லை

இருந்த போது ஏற்க மறுத்தாள்
அது தான் பிடிவாதம்
இருந்த போது ஏற்க மறுத்தாள்
அது தான் பிடிவாதம்

அவன் பிரிந்த போது
பார்க்க துடித்தாள் அந்தோ பரிதாபம்
பிரிவே காதலின் தண்டனையா
காதல் தோல்வியை மீறலையா

காதல் தேடி வாழ்ந்த காளை
கை கூடி வந்த வேளை

பார்க்க வந்தால் ரோஜா மாலை

ஆ...ஆ...ஆ...ஆ...

அவ பார்க்கும் முன்னே என்ன லீலை

ஆ...ஆ...ஆ...ஆ...

ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ
ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ

இதயக்கதவை தட்டி பார்த்தான் பூட்டி கொண்டாளே
திறக்க அவளும் நினைத்த போது திகைத்து நின்றாளே

நாயகி வரும் முன்னே நாடகம் முடிந்தது
இது தான் காவியமா
நாயகி வரும் முன்னே நாடகம் முடிந்தது
இது தான் காவியமா

ஓவியம் எழும் முன்னே தூரிகை உடைந்தது
அது தான் நியாயமா
நிலவோ உதித்திட வந்ததம்மா
பொழுதோ விடிந்திட போகுதம்மா

காதல் தேடி வாழ்ந்த காளை
கை கூடி வந்த வேளை

பார்க்க வந்தால் ரோஜா மாலை

ஆ...ஆ...ஆ...ஆ...

அவ பார்க்கும் முன்னே என்ன லீலை