Idho Thaanaagave Song Lyrics

இதோ தானாகவே பாடல் வரிகள்

Adhe Kangal (2017)
Movie Name
Adhe Kangal (2017) (அதே கண்கள்)
Music
M. Ghibran
Singers
Clinton Cerejo
Lyrics
Uma Devi
இதோ தானாகவே
ஏனோ நீயாகிறேன் விழி
காணாமலே உன்னை
போல் ஆகிறேன்

இலை வண்ணமாய்
மின்னுதே என்னை செல்லமாய்
கொல்லுதே காதல் காதல்
தூண்டுதே பார்வை கண்கள்
மீளுதே

ஆதவ பூவோ
மாதவ பூவோ உறவா
பகையா

காதல் எந்தன் விழிகள்
ஆகி அழகே உன்னை பார்க்குதடி
உன் வாசம் எந்தன் வழிகள் ஆகி
அருகில் என்னை சேர்க்குதடி

அட காற்று என்னும்
குதிரை ஏறி இதயம் மாயம்
ஆகுதடி

அடி ஆசையில்
உன்னை திருடி செல்ல
களவும் நியாயம் ஆகுமடி

முற்றும் துறந்தவள்
மோகம் தருபவள் நீ தானோ
பெண்ணே

நெற்றி சுடரென
நிலவை கோர்தவள்
நீயானாய் தானடி

ஒற்றை பூவின்
பிரம்மாண்ட காடாய்
நீயானாய் பெண்ணே

அற்றை நாளில்
அமுதம் வார்த்தவள்
நீயோ தானடி

அருகினில் வருதே
உயிரினை சுடுதே தோழி
உன் நினைவடி

தனிமையை
தொலைந்தேன் நிலவினில்
தொலைந்தேன் நீயே உறவடி

காதல் எந்தன் விழிகள்
ஆகி அழகே உன்னை பார்க்குதடி
உன் வாசம் எந்தன் வழிகள் ஆகி
அருகில் என்னை சேர்க்குதடி

அட காற்று என்னும்
குதிரை ஏறி இதயம் மாயம்
ஆகுதடி

அடி ஆசையில்
உன்னை திருடி செல்ல
களவும் நியாயம் ஆகுமடி

ஹே காதல் எந்தன்
விழிகள் ஆகி அழகே உன்னை
பார்க்குதடி உன் வாசம் எந்தன்
வழிகள் ஆகி அருகில் என்னை
சேர்க்குதடி