Nilaavae Vaa Song Lyrics

நிலாவே வா பாடல் வரிகள்

Mouna Ragam (1986)
Movie Name
Mouna Ragam (1986) (மௌன ராகம்)
Music
Ilaiyaraaja
Singers
S. P. Balasubramaniam
Lyrics
Vaali
நிலாவே வா.. செல்லாதே வா..
என்னாளும் உன் பொன்வானம் நான்
எனை நீ தான் பிரிந்தாலும் நினைவாலே அணைத்தேன்

நிலாவே வா.. செல்லாதே வா..

காவேரியா கானல் நீரா
பெண்மை என்ன உண்மை?

முள்வேலியா… முல்லைப்பூவா…
சொல்லு… கொஞ்சம் நில்லு…

அம்மாடியோ நீ தான் இன்னும் சிறு் பிள்ளை
தாங்காதம்மா நெஞ்சம் நீயும் சொன்ன சொல்லை
பூந்தேனே நீ தானே சொல்லில் வைத்தாய் முள்ளை ..

நிலாவே வா.. செல்லாதே வா..

பூஞ்சோலையில் வாடைக்காற்றும் வாட சந்தம் பாட
கூடாதென்று கூறும் பூவும் ஏது மண்ணின் மீது

ஒரே ஒரு பார்வை தந்தால் என்ன தேனே .
ஒரே ஒரு வார்த்தை சொன்னால் என்ன மானே
ஆகாயம் ஆகாத மேகம் ஏது கண்ணே

நிலாவே வா.. செல்லாதே வா..

என்னாளும் உன் பொன் வானம் நான்
எனை நீ தான் பிரிந்தாலும் நினைவாலே அணைத்தேன்

நிலாவே வா.. செல்லாதே வா..
என்னாளும் உன் பொன் வானம் நான்