Dinnam Dinnam Song Lyrics

தினம் தினம் நான் பாடல் வரிகள்

Naan (2012)
Movie Name
Naan (2012) (நான்)
Music
Vijay Antony
Singers
Annamalai, Vijay Antony
Lyrics
Annamalai
தினம் தினம் நான் சாகிறேன்
பயத்தினிலே வாழ்கிறேன்
வலியுடன் நான் போகிறேன்
இருள் மட்டுமே பார்க்கிறேன்

எங்கே போனால் என் நோய் போகும்
அங்கே போகும் பாதை வேண்டும்
எங்கே போனால் கண்கள் தூங்கும்
அங்கே வாழும் வாழ்க்கை வேண்டும்
(தினம் தினம்)

ஏன் நான் பிறந்தேன்
ஏன் நான் வாழ்கிறேன்
வாழ்வே சுமயாய்
நான் சுமக்கிறேன்

யார் நான் மறந்தேன்
வேர் நான் இழக்கிறேன்
தீயில் புழுவாய்
நான் துடிக்கிறேன்

என் பெயரே மறந்ததே
எவர் முகமே கிடைத்ததே
நொடிகள் என்னை வதைக்குதே
எந்தன் கண்ணில் ரத்தம் சிந்த
(தினம் தினம்)

மழையினில் நனைந்தேன்
இடியாய் விழுந்தது
எத்தனை முறை தான்
நான் சாவது

கனவாய் வாழ்க்கை
கலைந்தால் நல்லது
போதும் உலகில்
நான் வாழ்வது

அழுதிடவே நீர் இல்லை
அடித்திடு நீ வலியில்லை
இருந்திட நான் இடம் இல்லை
எந்தன் கண்ணில் ரத்தம் சிந்த