Moongil Vittu Song Lyrics
மூங்கில் விட்டு பாடல் வரிகள்

- Movie Name
- Abhiyum Naanum (2008) (அபியும் நானும்)
- Music
- Vidyasagar
- Singers
- Madhu Balakrishnan
- Lyrics
மூங்கில் விட்டு சென்ற பின்னே
அந்த பாட்டொடு மூங்கிலுக்கு உறவு என்ன
பெற்ற மகள் பிரிகின்றாள் அந்தப் பெண்ணோடு
தந்தைக்குள்ள உரிமை என்ன
காற்றைப் போல் வெயில் வந்து கடந்து போன பின்னும்
கை காட்டி மரம் கொள்ளும் தனிமை என்ன
மாயம்போல் கலைகின்ற மனித வாழ்க்கையில்
சொந்தங்கள் சொல்லிச்செல்லும் சேதி என்ன
பாசத்தின் ஊடாக ஞானம் கொள்ள
படைத்தவன் புரிகின்ற சூழ்ச்சி என்ன
அந்த பாட்டொடு மூங்கிலுக்கு உறவு என்ன
பெற்ற மகள் பிரிகின்றாள் அந்தப் பெண்ணோடு
தந்தைக்குள்ள உரிமை என்ன
காற்றைப் போல் வெயில் வந்து கடந்து போன பின்னும்
கை காட்டி மரம் கொள்ளும் தனிமை என்ன
மாயம்போல் கலைகின்ற மனித வாழ்க்கையில்
சொந்தங்கள் சொல்லிச்செல்லும் சேதி என்ன
பாசத்தின் ஊடாக ஞானம் கொள்ள
படைத்தவன் புரிகின்ற சூழ்ச்சி என்ன