Pona Pogattum Song Lyrics

போனா போகட்டும் பிச்சை பாடல் வரிகள்

Master (2020)
Movie Name
Master (2020) (மாஸ்டர்)
Music
Anirudh Ravichander
Singers
C. B. Vinith
Lyrics
Vishnu Edavan
தருதல கதறுன எல்லாம்
கேட்குமா கேட்குமா
தருதல கதிர் எல்லாம்
கேட்குமா கேட்குமா

இருட்டு அறையுல
அட உண்மை மறவில
நான் சிறக விரிக்கதான்
கொஞ்சம் ஆச வளர்த்துட்டேன்
வெளிச்சம் தெரிஞ்சது
மேல வானம் விடிஞ்சது
ஆன பறக்க முடியல
அடி நகர முடியல

பச்ச மண்ணு புள்ள ரெண்டு
மூச்சு நின்னு போயாச்சு இங்க
தங்குறதும் தூங்குறதும்
ரெண்டும் ஒன்னு ஆயாச்சு

கண்ணு ரெண்டும் கலங்குதா
நீயே தொடச்சுக்கோ இங்கே
அப்பன் ஆத்தா யாரும் இல்லே
தனியே தவிச்சுக்கோ

போனா போகட்டும்
பிச்சை உசுருதானே
திருந்த முடியாத
தருதலதான் நாமே
போனா போகட்டும்
பிச்சை உசுருதானே
திருந்த ஆசை உள்ள
தருதலதான் நாமே

தருதல கதறுன எல்லாம்
கேட்குமா கேட்குமா
தருதல கதிர் எல்லாம்
கேட்குமா கேட்குமா