Pattapagalo Kottum Mazhaiyo Song Lyrics
பட்டப் பகலோ கொட்டும் பனியோ பாடல் வரிகள்
- Movie Name
- Pillai Paasam (1991) (பிள்ளை பாசம்)
- Music
- Ilaiyaraaja
- Singers
- S. P. Balasubramaniam
- Lyrics
- Vaali
பட்டப் பகலோ கொட்டும் பனியோ
சுற்றித் திரியும் ராஜாக்கள்
ஹா வாராது கவலைகள்
விழிகளில் ஊறாது தீ வலைகள்
தினசரி தீராத உற்சாகம்தான்….(பட்டப்)
மேலும் மேலும் போடா போனால்தான் டா ராஜா
வாழ்க்கை என்னும் வாசல் இங்கு திறக்காதா
மோதும் போது மோது வெற்றிச் சந்தம் ஊது
வாலிபத்தில் வீரம் வந்து பிறக்காதா
முன்னேறு அச்சம் விட்டு
இன்னும் இன்னும் மேலேறு உச்சம் தொட்டு
ஹோய் சந்தோஷம் கையில் உண்டு
செல்வம் என்னும் சங்கீதம் பையில் உண்டு
நம்மப் பக்கம் நாள் தோறும் காற்றடிக்கும்..(பட்டப்)
கோடைகாலப் பூக்கள் கூறும் வாழ்த்துப் பாக்கள்
வாலிபத்தில் வேகம் ஒன்று பிறக்காதா
வேங்கை கூட அஞ்சும் வீரம் கொண்ட நெஞ்சும்
வானகத்தை கைகள் நீட்டிப் பறிக்காதா
எப்போதும் கட்டுப் பட்டு
எங்கள் வர்க்கம் நிற்காது குட்டுப்பட்டு
ஹோய் கொண்டாட்டம் நித்தம் நித்தம்
எங்கள் நெஞ்சம் வண்டாட்டம் சுத்தும் சுத்தும்
மெட்டுக் கட்டி ஓயாமல் பாட்டெடுத்தோம்...(பட்டப்)