Aagayam Pookkal Song Lyrics
ஆகாயம் பூக்கள் விற்க பாடல் வரிகள்
- Movie Name
- Vinnukum Mannukum (2001) (விண்ணுக்கும் மண்ணுக்கும்)
- Music
- Sirpi
- Singers
- P. Unnikrishnan, Sujatha Mohan
- Lyrics
ஆகாயம் பூக்கள் விற்க ஆரம்பிக்கும் நேரம்
அங்கங்கே பேரம்பேசி நிற்குதடி மேகம்
(ஆகாயம்..)
ஒற்றை செடி முகிலின் முத்தத்தில்
சுவாசிக்கும் கார்காலம்
மூங்கில் களி பச்சை பாம்போடு
கை கோர்த்து கல்யாணம்
குட்டை வால் ஓனான் வேலிக்குள்
குதித்தாடும் உற்சாகம்
கொட்டி வைத்த பூவை நெஞ்சில்
கொண்டு வந்து சேர்க்கும் ஜாலம்
(ஆகாயம்..)
சோளக்கதிர் முற்றும் பருவத்தில்
கிளி மூக்கில் சந்தோஷம்
சூரியனின் ரேகை மோதாமல்
சொட்டும் பனி சங்கீதம்
(சோளக்கதிர் ..)
கொப்பளித்த நீரை யானைகள்
துப்புவதில் குற்றாலம்
குட்டி கங்கை ஒவ்வொரு புல்லிலும்
கூடி ஏறும் விடியற் காலம்
குறவை மீன் தாவி தழுவாது
கூழாங்கல் மென்மையில்லையடி
குன்று மேல் வானை குற்றியொரு
குடை செய்ய ஆசையுள்ளதடி
வானம் மழை தூவும் பருவத்தில்
வருடும் புது மண் வாசம்
வாய்கால் வழியோடும் தண்ணீரில்
கப்பல் விட உத்தேசம்
(ஆகாயம்..)
ஆற்றங்கரை மரத்தின் கிளை மேலே
அமரும் ஒரு மீன்கொத்தி
அரை பவுனில் செய்து தருவோமா
அதற்கும் ஒரு மூக்குத்தி
(ஆற்றங்கரை..)
அதிகாலை சூரியன் வானத்தில்
மணி பார்க்கும் கடிகாரம்
அலங்காரம் செய்கிற வானில்
ஏழு வண்ண உதட்டு சாயம்
வல்லாரை லேகியம் இல்லாமல்
வானவில் ஞாபகம் தோன்றுதடி
கல்லூரி சென்று படிக்காமல்
கற்றாழை வைத்தியம் பார்க்குதடி
நதியோர ஈச்சங்கீற்றின்
நாக்கு ரொம்ப நீளம்
நாணல் ஏன் வளைந்ததென்று
நக்கல் பண்ணி பேசும்
(ஆகாயம்..)
(ஒற்றை செடி..)
அங்கங்கே பேரம்பேசி நிற்குதடி மேகம்
(ஆகாயம்..)
ஒற்றை செடி முகிலின் முத்தத்தில்
சுவாசிக்கும் கார்காலம்
மூங்கில் களி பச்சை பாம்போடு
கை கோர்த்து கல்யாணம்
குட்டை வால் ஓனான் வேலிக்குள்
குதித்தாடும் உற்சாகம்
கொட்டி வைத்த பூவை நெஞ்சில்
கொண்டு வந்து சேர்க்கும் ஜாலம்
(ஆகாயம்..)
சோளக்கதிர் முற்றும் பருவத்தில்
கிளி மூக்கில் சந்தோஷம்
சூரியனின் ரேகை மோதாமல்
சொட்டும் பனி சங்கீதம்
(சோளக்கதிர் ..)
கொப்பளித்த நீரை யானைகள்
துப்புவதில் குற்றாலம்
குட்டி கங்கை ஒவ்வொரு புல்லிலும்
கூடி ஏறும் விடியற் காலம்
குறவை மீன் தாவி தழுவாது
கூழாங்கல் மென்மையில்லையடி
குன்று மேல் வானை குற்றியொரு
குடை செய்ய ஆசையுள்ளதடி
வானம் மழை தூவும் பருவத்தில்
வருடும் புது மண் வாசம்
வாய்கால் வழியோடும் தண்ணீரில்
கப்பல் விட உத்தேசம்
(ஆகாயம்..)
ஆற்றங்கரை மரத்தின் கிளை மேலே
அமரும் ஒரு மீன்கொத்தி
அரை பவுனில் செய்து தருவோமா
அதற்கும் ஒரு மூக்குத்தி
(ஆற்றங்கரை..)
அதிகாலை சூரியன் வானத்தில்
மணி பார்க்கும் கடிகாரம்
அலங்காரம் செய்கிற வானில்
ஏழு வண்ண உதட்டு சாயம்
வல்லாரை லேகியம் இல்லாமல்
வானவில் ஞாபகம் தோன்றுதடி
கல்லூரி சென்று படிக்காமல்
கற்றாழை வைத்தியம் பார்க்குதடி
நதியோர ஈச்சங்கீற்றின்
நாக்கு ரொம்ப நீளம்
நாணல் ஏன் வளைந்ததென்று
நக்கல் பண்ணி பேசும்
(ஆகாயம்..)
(ஒற்றை செடி..)