Mancholai Kili thano Song Lyrics

மாஞ்சோலை கிளி பாடல் வரிகள்

Kizhake Pogum Rail (1978)
Movie Name
Kizhake Pogum Rail (1978) (கிழக்கே போகும் ரயில்)
Music
Ilaiyaraaja
Singers
P. Jayachandran
Lyrics
Muthulingam
ஆ : மாஞ்சோலை கிளி தானோ மான் தானோ
வேப்பந்தோப்பு குயிலும் நீ தானோ
மாஞ்சோலை கிளி தானோ மான் தானோ
வேப்பந்தோப்பு குயிலும் நீ தானோ
இவள் ஆவாரம் பூ தானோ நடை தேர் தானோ
சலங்கைகள் தரும் இசை தேன் தானோ

மாஞ்சோலை கிளி தானோ மான் தானோ
வேப்பந்தோப்பு குயிலும் நீ தானோ
இவள் ஆவாரம் பூ தானோ நடை தேர் தானோ
சலங்கைகள் தரும் இசை தேன் தானோ

நீரோடை போலவே சிரித்தாடி ஓடினாள்
நீரோடை போலவே சிரித்தாடி ஓடினாள்
வளையோசையே காதிலே சிந்து பாடுதே
பளிங்கு சிலையே பவளக்கொடியே
குலுங்கி வரும் இடையில் புரளும் சடையில் மயக்கும் மலர்கொடி

மாஞ்சோலை கிளி தானோ மான் தானோ
வேப்பந்தோப்பு குயிலும் நீ தானோ
இவள் ஆவாரம் பூ தானோ நடை தேர் தானோ
சலங்கைகள் தரும் இசை தேன் தானோ

மின்னல் ஒளியென கண்ணை பறித்திடும் அழகோ தேவதையோ
மின்னல் ஒளியென கண்ணை பறித்திடும் அழகோ தேவதையோ
அங்கம் ஒரு தங்க குடம் அழகினில்
மங்கை ஒரு கங்கை நதி உலகினில்
துள்ளும் இதழ் தேன் தான்
அள்ளும் கரம் நான் தான்
மஞ்சம் அதில் வஞ்சிக்கொடி வருவாள்
சுகமே
வருவாள் சுகமே தருவாள் மகிழ்வேன்
கண் காவியம் பெண் பாடிடும் பெண்ணோவியம் செந்தாமரையே
மேலாடை மாங்கனி அசைந்தாடும் வேளையில்
பல கோடிகள் ஆசையே வந்து மோதுதே
கரும்பு வயலே குறும்பு மொழியே
இளமையெனும் தனிமை நெருப்பை அணைக்கும் பருவ மழை முகில்

மாஞ்சோலை கிளி தானோ மான் தானோ
வேப்பந்தோப்பு குயிலும் நீ தானோ
இவள் ஆவாரம் பூ தானோ நடை தேர் தானோ
சலங்கைகள் தரும் இசை தேன் தானோ

மாஞ்சோலை கிளி தானோ மான் தானோ
வேப்பந்தோப்பு குயிலும் நீ தானோ