Enna Petha Raasa (Female) Song Lyrics
என்னப் பெத்த ராசா பாடல் வரிகள்
- Movie Name
- Thalaimurai (1998) (தலைமுறை)
- Music
- Ilaiyaraaja
- Singers
- Sunandha
- Lyrics
- Arivumathi
என்னப் பெத்த ராசா பாசம் என்ன லேசா
தன்னந்தனியாகி நிக்கிதிந்த ரோசா
மகன் உண்டு இருந்தாலும் மலடி
அழ வேண்டும் இப்போது குமுறி
காத்திருந்த நாள் இது கை நழுவிப் போகுது
பத்தி எரியும் பெத்த வயிறு…..(என்னப்)
வேல செஞ்சு நான் பொழச்சும்
ஏழை இல்ல மனசுக்குள்ள
என்னையே படைச்சான் ஏன் சாமியே
அட நான் பாவியே
தானம் என்று தான் கொடுக்க
கையில் ஒரு பொருளும் இன்றி
உன்னத்தான் கொடுத்தேன் நான் பாவியே
அம்மான்னு நீ அழைக்க காத்திருந்த நாளு
பன்னீரு ஆனதடா சேத்து வெச்ச பாலு
என் வயிற்றில் ஏன் பொறந்தே...
விதி வந்துதான் இங்கு விளையாடுது
எனக்கினி மேல் யாரோ யாரோ...(என்னப்)
சொல்லாம அன்பு வெச்சு
சொந்தத்தையும் மூடி வெச்சு நெஞ்சமே
எம்பியே போராடுதே தினம் போராடுதே
பெத்தாலும் புள்ள இல்ல
செத்தாலும் கொள்ளி இல்ல
சொந்தமும் பந்தமும் வேறானதே
என்னோட மனக் கதவு மூடவில்ல சாமி
எப்போதும் தெறந்திருக்கு அன்பு முகம் காமி
போற வழி ஒத்த வழி...
ஒழுங்காகத்தான் அது ஊர் சேரணும்
இனி உறவும் யாரோ யாரோ....(என்னப்)