kaNNilE iruppathenna kanni Song Lyrics

கண்ணிலே இருப்பதென்ன பாடல் வரிகள்

Ambikapathy  (1957) (1957)
Movie Name
Ambikapathy (1957) (1957) (அம்பிகாபதி)
Music
G. Ramanathan
Singers
T. M. Soundararajan
Lyrics
கண்ணிலே இருப்பதென்ன கன்னி இளமானே
காவியமோ ஓவியமோ கன்னி இளமானே

கண்ணிலே இருப்பதென்ன கன்னி இளமானே
காவியமோ ஓவியமோ கன்னி இளமானே
வண்ண முக வெண்ணிலவில் கன்னி இளமானே
வண்ண முக வெண்ணிலவில் கன்னி இளமானே
வண்டு வந்ததெப்படியோ கன்னி இளமானே
வண்டு வந்ததெப்படியோ கன்னி இளமானே

கண்ணிலே இருப்பதென்ன கன்னி இளமானே
காவியமோ ஓவியமோ கன்னி இளமானே

அன்ன நடை பின்னுவதேன் 
கன்னி இளமானே... ஆ... ஆ... ஆ... ஆ... 

அன்ன நடை பின்னுவதேன் கன்னி இளமானே
யார் விழிகள் பட்டனவோ கன்னி இளமானே
சின்ன இடை மின்னலெல்லாம் 
கன்னி இளமானே
தென்றல் தந்த சீதனமோ கன்னி இளமானே

கார்கு ழலை ஏன் வளர்த்தாய் கன்னி இளமானே
காளையரை கட்டுதற்கோ கன்னி இளமானே
கார் குழலை ஏன் வளர்த்தாய் கன்னி இளமானே
காளையரை கட்டுதற்கோ கன்னி இளமானே
பார்வையிலே நோய் கொடுத்தாய் 
கன்னி இளமானே
பக்கம் வந்து தீர்த்து வைப்பாய் கன்னி இளமானே

பல் வரிசை முல்லை என்றால் 
கன்னி இளமானே... ஏ... ஏ... ஏ... ஆ...

பல் வரிசை முல்லை என்றால் கன்னி இளமானே
பாடும் வண்டாய் நான் வரவா கன்னி இளமானே
பானுமதி மாறி வரும் வானகத்து மீனே
பார்க்க உன்னை தேடுதடி கன்னி இளமானே

கண்ணிலே இருப்பதென்ன கன்னி இளமானே
காவியமோ ஓவியமோ கன்னி இளமானே