Agila Bharadha Penngal Song Lyrics
அகில பாரத பெண்கள் பாடல் வரிகள்
- Movie Name
- Penn (1954) (பெண்)
- Music
- R. Sudharsanam
- Singers
- M. S. Rajeswari
- Lyrics
அகில பாரத பெண்கள் திலகமாய்
அவனியில் வாழ்வேன் நானே
ஆணுக்குப் பெண் தாழ்வெனப் பேசும்
வீணரை எதிர்ப்பேன் நானே.....(அகில)
வாழ்வினிலே இன்பம் வாய்த்திடவே
பழமை ஜாதி பேதம் எல்லாம்
பகைக்கும் புதுமைப் பெண் நானே –எள்ளி
நகைக்கும் புதுமைப் பெண் நானே (அகில)
வாசுகி ஔவை மணிமேகலை
மரபில் உதித்தவள் நானே – ஒளி
வீசும் கற்புக் கனலாம் கண்ணகி
வீரப் பெண்மணி போலே
வாழ்ந்திடுவேன் புவி மேலே.....(அகில)