Uyirile Uyirile Song Lyrics

உயிரிலே உயிரிலே பாடல் வரிகள்

Mupparimanam (2017)
Movie Name
Mupparimanam (2017) (முப்பரிமானம்)
Music
G. V. Prakash Kumar
Singers
Vijay Prakash
Lyrics
உயிரிலே உயிரிலே உறைந்ததே காதலே     
உறவு நீ பிரிந்ததால் விழியிலே தூரலே     
பூவே உன் வாசமின்றி நான் ஏதடி     
கை சேர்ந்து நீயும் என்னை காப்பாற்றடி      
உயிரிலே உயிரிலே உறைந்ததே காதலே     
உறவு நீ பிரிந்ததால் விழியிலே தூரலே     
     
நான் காணும் காட்சியெல்லாம் உனைக்காட்டுதே     
அன்பே நீ எங்கே என்று எனைக்கேட்குதே     
தேனீரிலும் உன் பூ முகம் திண்டாடுதே என் ஞாபகம்     
கண் தேடுதே உன் கால் தடம்      (உயிரிலே)
     
ஓயாமல் வீசும் காற்றும் உனைப்பேசுதே     
மூச்சோடு சேர்ந்துகொண்டு எனை ஏசுதே     
கண்ணீரிலே கண் மூழ்குதே     
கண்ணாடியை கல் மோதுதே     
என்னாகுமோ என் காதலே………      
(உயிரிலே)