Kada Veedhi Song Lyrics

கடை வீதி பாடல் வரிகள்

Amman Kovil Kizhakale (1986)
Movie Name
Amman Kovil Kizhakale (1986) (அம்மன் கோயில் கிழக்காலே)
Music
Ilaiyaraaja
Singers
S. Janaki, S. P. Balasubramaniam
Lyrics
Gangai Amaran
ஆ : நம்ம கடை வீதி கலக்கலக்கும்
என் அக்காமக அவ நடந்து வந்தா
குழு : ஆமா சொல்லு
ஆ :நம்ம பஸ் ஸ்டாண்டே பளப்பளக்கும்
ஒரு பச்சைக்கிளி அது பறந்து வந்தா
குழு : அப்படி சொல்லு     
ஆ : அவ பின்னி முடிச்ச அவ ரெட்டை சடையும்
நல்ல எட்டு எடுத்து அவ வச்ச நடையும்
தூண்டில் ஒண்ணு போட்டதைப் போல்
சுண்டி சுண்டி வந்திழுக்கும்
கடை வீதி கலக்கலக்கும்
என் அக்காமக
குழு : அவ நடந்து வந்தா

ஆ : ஒரு சிங்காரப் பூங்கொடிக்கு ஒரு சித்தாட தானெடுத்து
அவ சில்லுன்னு சிரிக்கையிலே
குழு : அடி ஐயடி ஐயா
ஆ : சிறு வெள்ளிக் கொலுசெதுக்கு 
குழு : அடி ஐயடி ஐயா
ஆ : கண்ணாலே சம்மதம் சொன்னா கைய புடிச்சா ஒத்துக்குவா
கல்யாணம் பண்ணணுமின்னா வெக்கப்படுவா
வேறெதும் சங்கடமில்ல சங்கதி எல்லாம் கத்துக்குவா
விட்டு விலகி நின்னா கட்டிப்புடிப்பா
வெட்ட வெளியில்
குழு : ஐயய்யோ
ஆ : ஒரு மெத்தை விரிச்சேன்
குழு : ஐயய்யய்யோ
ஆ : மொட்டு மலர தொட்டு பறிச்சேன்
மெல்ல சிரிச்சா 

ககக கடை வீதி கலக்கலக்கும்
என் அக்காமக
குழு : அவ நடந்து வந்தா
ஆ : நம்ம பஸ் ஸ்டாண்டே பளப்பளக்கும்
ஒரு பச்சைக்கிளி
குழு : அது பறந்து வந்தா
                       
ஆ : அடி முக்காலும் காலும் ஒன்னு
இனி உன்னோட நானும் ஒண்ணு
அடி என்னோட வாடிப்பொண்ணு
குழு : அடி ஐயய்யோ
ஆ : சிறு செம்மீனை போல கண்ணு
குழு : அடி ஐயய்யோ
ஆ : ஓய்..ஒன்னாக கும்மியடிப்போம்
ஒத்து ஒழைச்சா மெச்சிக்குவோம்
விட்டாக்கா உன் மனசை கொள்ளையடிப்பேன்
கல்யாணப் பந்தலக்கட்டி பத்திரிக்கையும் வச்சுக்குவோம்
இப்போது சொன்னதை எல்லாம் செஞ்சு முடிப்போம்
தங்கக் குடமே
குழு : ஐயய்யோ
ஆ : புது நந்தவனமே
குழு : ஐய்யய்யோ
சம்மதம் சொல்லு இந்த இடமே இன்பச் சுகமே

ஆ : அடடா கடை வீதி கலக்கலக்கும்
என் அக்காமக...
அய்..அப்பா! என்ன அண்ணே இந்த அடி அடிச்சிட்டீங்க
ஆ : யாரோட அக்கா மகடா டாய் 
குழு : அண்ணனோட அக்கா மக
ஆ :ஆங்
குழு : அவ நடந்து வந்தா
ஆ :நம்ம பஸ் ஸ்டாண்டே பளப்பளக்கும்
குழு : அண்ணனோட பச்சைக்கிளி
ஆ :ஹேஹே ஹேய்
குழு : அது பறந்து வந்தா
ஆ :அவ பின்னி முடிச்ச அவ ரெட்டை சடையும்
நல்ல எட்டு எடுத்து அவ வச்ச நடையும்
தூண்டில் ஒண்ணு போட்டதைப் போல்
சுண்டி சுண்டி வந்திழுக்கும்

கடை வீதி கலக்கலக்கும்
என் அக்காமக
குழு : அவ நடந்து வந்தா
ஆ :நம்ம பஸ் ஸ்டாண்டே பளப்பளக்கும்
ஒரு பச்சைக்கிளி
குழு : அது பறந்து வந்தா