Purushanthan Ivan Purushanthan Song Lyrics

புருசன்தான் இவன் புருசன்தான் பாடல் வரிகள்

Ranga (1982)
Movie Name
Ranga (1982) (ரங்கா)
Music
Singers
S. P. Balasubramaniam, Vani Jayaram
Lyrics
Vaali
புருசன்தான்......இவன் புருசன்தான்.
இவன் பேரு ரங்கா என்னுடைய பங்கா
ஒட்டிக்கிட்டான்யா கைய கட்டிக்கிட்டான்யா
பங்குனி மாசம் கல்யாணம்
பல்லாக்கில ஊர்கோலம்

பொண்டாட்டி... இவ பொண்டாட்டி...
இவ பேரு கங்கா என்னுடைய பங்கா
ஒட்டிக்கிட்டாம்மா கைய கட்டிக்கிட்டாம்மா
பங்குனி மாசம் கல்யாணம்
பல்லாக்குல ஊர்கோலம் (புருசன் தான்)

என் காவலுக்கு இளம் சிங்கம் இருக்கு
கண் வலை வீசி புடிச்சேனய்யா....
கொஞ்சி விளையாட துடிச்சேனய்யா ஹா.

என்னை கொஞ்சம் பார்த்தது பொண்ணு
அல்லிப் பூவாய் பூத்தது கண்ணு
அடிக்கடி சிரிக்குது உதட்டையும் கடிக்குது ஏன்
புருசன்தான்......இவன் புருசன்தான்....(இவ பேரு)

எட்டிப் போனா கட்டிப்பா செல்லக்குட்டி
தொட்டுப் பாத்தால் தித்திப்பா வெல்லக்கட்டி
அடி போக்கிரி உனை பார்க்கையில் ஒரு லாகிரி

கிள்ளக் கிள்ள துள்ளுது தேகம்
சொல்ல சொல்ல கொல்லுது மோகம்
இளவட்டு விழி பட்டு பனி மொட்டு வெடிச்சுது வா.

பொண்டாட்டி... இவ பொண்டாட்டி
இவன் பேரு ரங்கா என்னுடைய பங்கா
ஒட்டிக்கிட்டான்யா ஹா. கைய கட்டிக்கிட்டான்யா
பங்குனி மாசம் கல்யாணம் பல்லாக்கில ஊர்கோலம்…..!