Yamma Yamma Thalli Sellu Song Lyrics
யம்மா யம்மா தள்ளிச் செல்லு பாடல் வரிகள்
- Movie Name
- Thodarum (1999) (தொடரும்)
- Music
- Ilaiyaraaja
- Singers
- K. S. Chithra, S. P. Balasubramaniam
- Lyrics
யம்மா யம்மா தள்ளிச் செல்லு
எங்கே எல்லை அங்கே நில்லு
சொல்லாமல் நீ தீண்டினால்
எல்லைக் கோட்டை தாண்டினால்
உன் தாபம் தான் தீருமா
உன் மோகம் தான் போகுமா
காதல் வலையிலே ஏன் மாட்டினாய்
இந்தக் கன்னி மனதை நீ ஏன் வாட்டினாய்.(யம்மா)
ஒட்டிக் கொள்ள வந்தேன் எட்டிச் செல்கிறாய்
கட்டிக் கொள்ள வந்தேன் விட்டுச் செல்கிறாய்
கிட்ட வந்து நின்றாய் கெட்டுப் போகுது
கட்டவிழ்ந்து நெஞ்சும் விட்டுப் போகுது
புதிர் போடும் கிளியே கிளியே...
வீணான பழியே பழியே
உனக்கு வந்த இணையே இணையே
தொடுப்பதென்ன கணையே கணையே
வேறு இடம் உனக்கிருக்கு
இந்த வெற்று இடம் உனக்கெதுக்கு
நான் உண்மை என்று கண்டதும்
உன்னை நம்பி வந்ததும் வீண் கதையாச்சு.(யம்மா)
வெண்ணிலவுக்கிங்கே அல்லி ஏக்கமே
கண்ணனுக்கு அங்கே ராதை ஏக்கமே
கோபியர்கள் உள்ளம் கோகுலத்திலே
கண்ணன் அவன் நெஞ்சம் யாரிடத்திலே
ஒரு போதும் ராமன் இங்கே...
உருமாறிப் போவதும் இல்லை
கண்ணன் என என்னை நீயும்
காண்பதிலும் நியாயம் இல்லை
என்ன என்ன கதை இருக்கு
அதில் இந்தக் கதை இங்கு எதற்கு
அந்த கட்டுக் கதை நிஜமா
கண்ட கதை நிஜமா யார் விளக்குவது..(யம்மா)