Muthu Mani Song Lyrics

முத்துமணி முத்துமணி பாடல் வரிகள்

Adharmam (1994)
Movie Name
Adharmam (1994) (அதர்மம்)
Music
Ilaiyaraaja
Singers
S. Janaki, S. P. Balasubramaniam
Lyrics
Vaali
முத்துமணி முத்துமணி
சின்னஞ்சிறு கண்ணுமணி
தாவணி ஆடும் ஓர் லாவணி பாடும்
அருந்ததி பார்க்கும் ஆவணி மாதம்
இது தினமும் தினமும்
புதிதாய் தொடராதோ..ஓ...

முத்துமணி முத்துமணி
சின்னஞ்சிறு கண்ணுமணி


மானும் உண்டு கெண்டை மீனும் உண்டு
ரெண்டும் கொண்ட கண்ணில் வண்டும் உண்டு 

விழுந்தேன் உனக்குள் நானே நானே
கனிந்தேன் கலந்தேன் நானே நானே

கண்ணாலே நீ என்னை களவாடிக் கொண்டாயோ

நெஞ்சத்தில் நீ என்றும் நிலையாக நின்றாயோ

இது தினமும் தினமும் புதிதாய் தொடராதோ...ஓ...

முத்துமணி முத்துமணி
சின்னஞ்சிறு கண்ணுமணி
தாவணி ஆடும் ஓர் லாவணி பாடும்
அருந்ததி பார்க்கும் ஆவணி மாதம்
இது தினமும் தினமும்
புதிதாய் தொடராதோ

முத்துமணி முத்துமணி
சின்னஞ்சிறு கண்ணுமணி


ஓ.ஓ..ஹோ.. ஓ.ஓ..ஹோ.. ஹோ..ஓ... (இசை)

ஆசை பட்டு பட்டு தோளை தொட்டு
தோளை தொட்டு வெட்கம் நாளும் விட்டு

இனிமேல் இனிமேல் காலை மாலை
கொடுத்தே அனுப்பு ஓலை ஓலை

தலைவாசல் தாண்டாமல்
தனியாக நின்றேனே

அலையாத உள்ளத்தை
துணையாக தந்தேனே

இது தினமும் தினமும் புதிதாய் தொடராதோ..ஓ...

முத்து மணி முத்துமணி

சின்னஞ்சிறு கண்ணுமணி

தாவணி ஆடும் ஓர் லாவணி பாடும்

அருந்ததி பார்க்கும் ஆவணி மாதம்

இது தினமும் தினமும் புதிதாய் தொடராதோ..ஓ..

முத்துமணி முத்துமணி

சின்னஞ்சிறு கண்ணுமணி