Idhayam Intha Idhayam Song Lyrics

இதயம் இந்த இதயம் பாடல் வரிகள்

Billa 2 (2012)
Movie Name
Billa 2 (2012) (பில்லா 2)
Music
Yuvan Shankar Raja
Singers
Na. Muthukumar, Yuvan Shankar Raja
Lyrics
Na. Muthukumar
 இதயம் இந்த இதயம்
இன்னும் எதனை இன்பங்கள் தாங்கிடுமோ
இதயம் இந்த இதயம்
இன்னும் எத்தனை துன்பங்கள் தாங்கிடுமோ

ஆசை தூண்டிலில் மாட்டிக்கொண்டு
இது தத்தளித்து துடிக்கிறதே
காயம் யாவையும் தேற்றி கொண்டு
இது மறுபடியும் நினைகிறதே

உள்ளுக்குள்ளே துடிக்கும் சிறு இதயம்
எத்தனையோ கடலை இது விழுங்கும்

வேண்டும் வேண்டும் என்று கேட்கையிலே
வேண்டாம் வேண்டாம் என்று சொல்லுமே
வேண்டாம் வேண்டாம் என்று விலகி நின்றால்
வேண்டும் வேண்டும் என்று துள்ளுமே

இது தவித்திடும் நெருப்பா
இல்லை குளிர்ந்திடும் நீரா
இது பனி ஏறி மழையா
இதை அறிந்தோர் யாருமில்லை
உள்ளத்திலே அறை உண்டு வாசல் இல்லை
உள்ளே வந்திடும் நினைவோ திரும்பவில்லை

தூங்கும் போதும் இது துடித்திடுமே
ஏங்கும் போதோ இது வெடிக்கும்
தீண்டும் விரல் என்று தெரிந்த பின்பும்
வேண்டும் என்றே இது நடிக்கும்

இது கடவுளின் பிழையா
இல்லை படைத்தவன் கொடையா
கேள்வி இல்லா விடையா
இதை அறிந்தோர் யாருமில்லை
இதயம் இல்லை என்றால் என்ன நடக்கும்
கண்ணீர் என்னும் வார்த்தையை மொழி இழக்கும்

இதயம் இந்த இதயம்
இன்னும் எதனை இன்பங்கள் தாங்கிடுமோ
இதயம் இந்த இதயம்
இன்னும் எத்தனை துன்பங்கள் தாங்கிடுமோ