Ilarattham Soodera Song Lyrics

இளஇரத்தம் சூடேற பாடல் வரிகள்

Kadamban (2017)
Movie Name
Kadamban (2017) (கடம்பன்)
Music
Yuvan Shankar Raja
Singers
M. L. R. Karthikeyan
Lyrics
Yugabharathi
இளஇரத்தம் சூடேற திசை எட்டும் தூளாக     
பகை இல்லை இல்லை கைகள் சேர     
ஒரு யுத்தம் ஈடேற பயம்மில்லை போராட     
விடிவெள்ளி எங்கள் பேரை கூற     
எதிராளி யாரென நாங்கள் அறிவோமே மண் மேலே     
ஒரு போதும் தோல்விகள் இல்லை     
நடப்போமே முன்னாலே      (இளஇரத்தம்)
     
ஓ……… கண்ணீரென்ன கண்ணீரென்ன      
கண்ணிலே ரெண்டிலே ஒன்றை     
இன்றே செய்வோம்     
மண்ணிலே எங்கே எங்கே குற்றம் இங்கே     
தேடாமல் தீராதே சோகங்களே     
தீயிலே வாட்டுவோம்     
செல்லாத காசுபோல் எம்மையாக்கிய      
சூழலை மாற்றுவோம் எல்லையை மீறுவோம்     
இன்னும் சீறுவோம்      
நாங்களும் யாரென காட்டுவோம்      (இளஇரத்தம்)
     
ம்………… எல்லோருக்கும் எல்லாம் இங்கே     
சொந்தமா செவ்வானந்தான்     
முள் வேலிக்குள் தங்குமா     
அன்னை தந்தை என்றும் எங்கள் காடென்று      
வாழ்ந்தோமே நீங்காமலே     
பொன்னான காடிதை சூரையாடினால்     
வேட்டையும் ஆடுவோம்     
என்னாலும் வேலிபோல் நாங்கள்      
எங்களை காவலாய் போடுவோம்     
ஆயுதம் தூக்குவோம் வேதனை போக்குவோம்      
வெற்றியின் உச்சியில் ஏறுவோம்      (இளஇரத்தம்)