Kann Pesum Song Lyrics

கண் பேசும் வார்த்தைகள் பாடல் வரிகள்

7G Rainbow Colony (2004)
Movie Name
7G Rainbow Colony (2004) (7ஜி ரெயின்போ காலனி)
Music
Yuvan Shankar Raja
Singers
Karthik
Lyrics
Na. Muthukumar
ஆண் : கண் பேசும்
வார்த்தைகள் புரிவதில்லை
காத்திருந்தால் பெண்
கனிவதில்லை ஒரு முகம்
மறைய மறு முகம் தெரிய
{கண்ணாடி இதயம் இல்லை
கடல் கை மூடி
மறைவதில்லை } (2)

ஆண் : காற்றில் இலைகள்
பறந்த பிறகும் கிளையின்
தழும்புகள் அழிவதில்லை
காயம் நூறு கண்ட பிறகும்
உன்னை உள் மனம்
மறப்பதில்லை

ஆண் : ஒரு முறைதான்
பெண் பார்ப்பதினால் வருகிற
வழி அவள் அறிவதில்லை
கனவினிலும் தினம் நினைவினிலும்
கரைகிற ஆண் மனம் புரிவதில்லை

ஆண் : கண் பேசும்
வார்த்தைகள் புரிவதில்லை
காத்திருந்தால் பெண்
கனிவதில்லை ஒரு முகம்
மறைய மறு முகம் தெரிய
கண்ணாடி இதயம் இல்லை
கடல் கை மூடி
மறைவதில்லை

ஆண் : காட்டிலே
காயும் நிலவு கண்டு
கொள்ள யாருமில்லை
கண்களின் அனுமதி வாங்கி
காதலும் இங்கே வருவதில்லை

ஆண் : தூரத்தில் தெரியும்
வெளிச்சம் பாதைக்கு சொந்தம்
இல்லை மின்னலின் ஒளியை
பிடிக்க மின்மினி பூச்சிக்கு
தெரியவில்லை

ஆண் : விழி உனக்கு
சொந்தமடி வேதனைகள்
எனக்கு சொந்தமடி அலை
கடலை கண்ட பின்னே
நுரைகள் மட்டும் கரைக்கே
சொந்தமடி

ஆண் : கண் பேசும்
வார்த்தைகள் புரிவதில்லை
காத்திருந்தால் பெண்
கனிவதில்லை ஒரு முகம்
மறைய மறு முகம் தெரிய
கண்ணாடி இதயம் இல்லை
கடல் கை மூடி
மறைவதில்லை

ஆண் : உலகத்தில்
எத்தனை பெண் உள்ளது
மனம் ஒருத்தியை மட்டும்
கொண்டாடுது ஒரு முறை
வாழ்ந்திட திண்டாடுது இது
உயிர் வரை பாய்ந்து பந்தாடுது

ஆண் : பனி துளி வந்து
மோதியதால் இந்த முள்ளும்
இங்கே துண்டானது பூமியில்
உள்ள பொய்கள் எல்லாம் அட
புடவை கட்டி பெண் ஆனது

ஆண் : ஏ புயல் அடித்தால்
மழை இருக்கும் மரங்களும்
பூக்களும் மறைந்து விடும்
சிரிப்பு வரும் அழுகை வரும்
காதலில் இரண்டுமே கலந்து
வரும்

ஆண் : ஒரு முறைதான்
பெண் பார்ப்பதினால் வருகிற
வழி அவள் அறிவதில்லை
கனவினிலும் தினம் நினைவினிலும்
கரைகிற ஆண் மனம் புரிவதில்லை

ஆண் : ஹே கண் பேசும்
வார்த்தைகள் புரிவதில்லை
காத்திருந்தால் பெண்
கனிவதில்லை ஒரு முகம்
மறைய மறு முகம் தெரிய
கண்ணாடி இதயம் இல்லை
கடல் கை மூடி
மறைவதில்லை

ஆண் : காற்றில் இலைகள்
பறந்த பிறகும் கிளையின்
தழும்புகள் அழிவதில்லை
காயம் நூறு கண்ட பிறகும்
உன்னை உள் மனம்
மறப்பதில்லை