Pookodiyil Punnagai Song Lyrics

பூ கொடியின் புன்னகை பாடல் வரிகள்

Iruvar (1997)
Movie Name
Iruvar (1997) (இருவர்)
Music
A. R. Rahman
Singers
Sandhiya
Lyrics
Vairamuthu
பூ கொடியின் புன்னகை அலை நதியின் புன்னகை
மழை முகிலின் புன்னகை நீ காதலின் புன்னகை
பூ கொடியின் புன்னகை அலை நதியின் புன்னகை
மழை முகிலின் புன்னகை நீ காதலின் புன்னகை
அந்தப் பௌளர்ணமி என்பது ஒரு மாதத்தின் புன்னகை
உன் வருகையில் பூத்ததென்ன என் வாழ்க்கையின் புன்னகை
என் வாழ்க்கையின் புன்னகை

(பூ கொடியின்)

உனது நிழல் தரைவிழுந்தால் என் மடியில் ஏந்திக்கொள்வேன் அ அ அ
உனது நிழல் தரைவிழுந்தால் என் மடியில் ஏந்திக்கொள்வேன்
வான் மழையில் நீ நனைந்தால் தென்றல் கொண்டு நான் துடைப்பேன்
ஒரு நாள் எனை சோதித்துப் பார் ஒரு வார்த்தைக்கு உயிர் கொடுப்பேன்
ஒரு வார்த்தைக்கு உயிர் கொடுப்பேன்

(பூ கொடியின்)

நீலம் மட்டும் இழந்துவிட்டால் வானில் ஒரு கூரையில்லை
நீலம் மட்டும் இழந்துவிட்டால் வானில் ஒரு கூரையில்லை
சூரியனை இழந்துவிடால் கிழக்குக்கொரு திலகமில்லை
நீ ஒரு முறை திரும்பிக்கொண்டால் என் உயிருக்கு உறுதியில்லை
என் உயிருக்கு உறுதியில்லை

(பூ கொடியின் )