Vichithirame Manithan Charithirame Song Lyrics

விசித்திரமே மனிதன் பாடல் வரிகள்

Ellorum Vazhavendum (1962)
Movie Name
Ellorum Vazhavendum (1962) (எல்லோரும் வாழவேண்டும்)
Music
Rajan–Nagendra
Singers
C. S. Jayaraman
Lyrics
Villiputhan

விசித்திரமே மனிதன் சரித்திரமே – இதன்
விளக்கமெல்லாம் மகா பயங்கரமே
பசிக்குணவு தரும் உலகம் பலவிதமே – மனிதன்
பகலிரவும் ஆடுகின்ற பம்பரமே.......

விசித்திரமே மனிதன் சரித்திரமே – இதை
விளக்கிவிட்டால் வரும் ஆத்திரமே – பொதுவில்
இயற்கையின் வளர்ச்சியெல்லாம் பொதுநலமே
அறிவு இருக்கிற மனிதனைப் பார் சுயநலமே அதனால் (விசித்திரமே)

சொந்த நாட்டைக் காணும் ஆசை கண்களிலே – தங்கை
சோக வாழ்வு காட்சி வேறு மனதினிலே
இந்த வேளை தவறு செய்த நண்பனாலே – சிறையில்
இருந்து தியாகம் செய்தவன் பார் கண் முன்னாலே பொதுவில் (விசித்திரமே)

பாம்புக்கு பாலூட்டி வளர்த்துவிட்டான் – மனித
பண்புக்குத் தலை வணங்கி அழுதுவிட்டான்
வெளுத்ததெல்லாம் பால் போல் நினைத்துக் கெட்டான் –கையில்
விளக்கிருந்தும் கிணற்றில் விழுந்துவிட்டான் பாவம் (விசித்திரமே)

அலையும் கடலில் ஒரு முத்தை எடுத்தான் – அதை
அடுத்தவர் சுகங் காண பறி கொடுத்தான்
மலை போல் துன்பமெல்லாம்தான் சுமந்தான் – பிறர்க்கு
மரம் தரும் நிழல் போல பிறந்துவிட்டான் - கொடுமை (விசித்திரமே)

கவலையில்லா மனிதன் உலகில் பிறந்ததில்லை
கவலை கசக்குதென்றால் வாழ்க்கைக் காட்சி ருசிப்பதில்லை
காய்க்கு முன்னே பழம் பழுத்த கதையுமில்லை
காலம் கொடுத்த உயிரை அழிக்க உனக்கு – உரிமையில்லை (விசித்திரமே)

.