Machhan Peru Madhurey Song Lyrics

மச்சான் பேரு பாடல் வரிகள்

Madhurey (2004)
Movie Name
Madhurey (2004) (மதுர)
Music
Vidyasagar
Singers
Shankar Mahadevan
Lyrics
மச்சான் பேரு மதுர நீ நின்னு பாரு எதிர
மச்சான் பேரு மதுர நீ நின்னு பாரு எதிர
நான் ரெக்கை கட்டி பறந்து வரும் ரெண்டு காலு குதிரை
மச்சான் பேரு மதுர நீ நின்னு பாரு எதிர
நான் ரெக்கை கட்டி பறந்து வரும் ரெண்டு காலு குதிரை
பறையடிச்சா பாட்டு வரும் உரையடிச்சா ஆட்டம் வரும்
கட்டி வெல்லம் உன்ன பார்த்தா கட்டெறும்பு கூட வருமே
மச்சான் பேரு மதுர நீ நின்னு பாரு எதிர ஹேய்

உருமி உருமி மேளம் இவ உரச உரச தாளம்
கூந்தல் முதல் பாதம் வரை இவகோடி ரூபா ஏலம்
உடுக்கே உடுக்கே இடுப்பே இது எந்த நாட்டு நடப்பே
தத்தளிக்கும் பேரழகு தக்காளி பழ செவப்பே
ஹெய் இட்டு கட்டி பாடுவேன் வூடு கட்டி ஆடுவேன்
பட்டி தொட்டி சேர்ந்து வந்தா பானா கத்தி வீசுவேன்
நாளு நல்ல நாளுதான் நடப்பதெல்லாம் தூளுடா
நூறு கோடி ஆளுகிட்ட என்னை பத்தி கேளுடா
அழகான முகமே ஹலோ ஹலோ சுகமே
சுட்டு விரல் தொட்டு புட்டா தீ பிடிக்கிது நகமே

மச்சான் பேரு மதுர நீ நின்னு பாரு எதிர
நான் ரெக்கை கட்டி பறந்து வரும் ரெண்டு காலு குதிரை

நெருப்பு நெருப்பு கோழி இவ நெருங்கி வந்த தோழி
வேர்வையிலே தீயனைக்கும் வித்தய கத்துக்கோடி
அருவி அருவி பாய்ச்சல் நான் உனக்குள் ஆடும் நீச்சல்
அலை போல நான் விளயாடினால் அடங்காதோ உந்தன் காய்ச்சல்
படபடக்கும் சிட்டுடா பனாரசு பட்டுடா
தங்கத்தாலே செஞ்சு வச்ச தஞ்சாவூரு கட்டுடா
ஒத்தயாக ஓட வா ஓடி விளயாடவா
பத்து விரல் காத்திருக்கு பந்தல் ஒன்னு போடவா
அழகான திருடி எனக்குள்ள இருடி
கொஞ்சி கொஞ்சி பேசிக்கலாம் கொஞ்ச நேரம் கூடி

மச்சான் பேரு மதுர நீ நின்னு பாரு எதிர
ரெக்கை கட்டி பறந்து வரும் ரெண்டு காலு குதிரை
பறையடிச்சா பாட்டு வரும் உரையடிச்சா ஆட்டம் வரும்
கட்டி வெல்லம் உன்ன பார்த்தா கட்டெறும்பு கூட வருமே