Poovarasam Poo Song Lyrics

பூவரசம்பூ பூத்தாச்சு பாடல் வரிகள்

Kizhake Pogum Rail (1978)
Movie Name
Kizhake Pogum Rail (1978) (கிழக்கே போகும் ரயில்)
Music
Ilaiyaraaja
Singers
S. Janaki
Lyrics
Gangai Amaran
பூவரசம்பூ பூத்தாச்சு..
பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சு
காவேரி போலப் பொங்குற மனசு பாடாதோ..

கூ.. சுக்குச்சுக்கு சுக்குச்சுக்கு
சுக்குச்சுக்கு சுக்குச்சுக்கு
பூவரசம்பூ பூத்தாச்சு..
பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சு
காவேரி போலப் பொங்குற மனசு பாடாதோ
பூவரசம்பூ பூத்தாச்சு..
பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சு
காவேரி போலப் பொங்குற மனசு பாடாதோ...


ல்ல்ல்ல் ல்ல்ல்ல் லலல்லா..
லல்லலலல்லல லலல்லா..
லல்லலலல்லல லாலா....


தூது போ ரயிலே ரயிலே.. துடிக்குதொரு குயிலே குயிலே..
என்னென்னவோ என் நெஞ்சிலே

தூது போ ரயிலே ரயிலே.. துடிக்குதொரு குயிலே குயிலே..
என்னென்னவோ என் நெஞ்சிலே
பட்டணம் போனா பார்ப்பாயா
பார்த்தொரு சங்கதி கேட்பாயா
கிழக்கே போகும் ரயிலே.. நீதான் எனக்கொரு தோழி
தூது போவாயோ..

பூவரசம்பூ பூத்தாச்சு.. பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சு
காவேரி போலப் பொங்குற மனசு பாடாதோ


நடப்பதோ மார்கழி மாசம்.. தையிலே நிச்சயதார்த்தம்
நாதசுரம்.. மேளம் வரும்
நடப்பதோ மார்கழி மாசம்.. தையிலே நிச்சயதார்த்தம்
நாதசுரம்.. மேளம் வரும்
நெதமும் நெல்லைச் சோறாக்கி.. நெத்திலி மீனைக் குழம்பாக்கி
மச்சான் வந்தா ஆக்கிக் கொடுப்பேன்
மாருல சாய்ஞ்சு புதையலெடுப்பேனே

பூவரசம்பூ பூத்தாச்சு.. பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சு
காவேரி போலப் பொங்குற மனசு பாடாதோ
கரகர வண்டி காமாட்சி வண்டி.. கிழக்கே போறது பொள்ளாச்சி வண்டி
கூ.. கிரி கிரி கிரி கிரி.. கிரி கிரி கிரி கிரி..
ஆ..


நாளெல்லாம் ஏங்கிக்கிட்டிருக்கேன்.. சாமிக்கு வேண்டிக்கிட்டிருக்கேன்
தூக்கமில்லே.. காத்திருக்கேன்
வீரபாண்டிக் கோயிலிலே.. வருகிற தைப் பொங்கலிலே
வேண்டினபடியே பொங்கலும் வைப்பேன்
கேட்டதையெல்லாம் கொடுக்குற சாமிக்கு

பூவரசம்பூ பூத்தாச்சு.. பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சு
காவேரி போலப் பொங்குற மனசு பாடாதோ
பூவரசம்பூ பூத்தாச்சு.. பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சு
காவேரி போலப் பொங்குற மனசு பாடாதோ…