Hey En Aasa Song Lyrics

என் ஆசை வாழைக்குருத்தே பாடல் வரிகள்

Aayiram Vaasal Idhayam (1980)
Movie Name
Aayiram Vaasal Idhayam (1980) (ஆயிரம் வாசல் இதயம்)
Music
Ilaiyaraaja
Singers
Malaysia Vasudevan, S. P. Sailaja
Lyrics
Gangai Amaran
என் ஆசை வாழைக்குருத்தே
நீ இப்போது எங்க இருக்க
ராத்திரி நேரத்தில
ஊரடங்கி தூங்குற சாமத்தில

ஏக்கம் புடிச்சுது
தூக்கம் புடிக்கல
என்னத்த நானும் சொல்ல

என் ரெண்டு கண்ணும் சிவந்தது
எண்ணம் துடிச்சது
வேறென்ன நானும் சொல்ல

என் ஆசை வாழைக்குருத்தே
நீ இப்போது எங்க இருக்க


ஆசை மனசில
காதல் நினைப்பையும்
மன்மதன் தூவிப்புட்டான்
பூவெடுத்து அம்பையும் ஏவிப்புட்டான்

அள்ளி புடி என்று
சொல்லி கொடுத்தவன்
உங்கிட்ட சேர்ந்துக்கிட்டான்
உன் உடம்பு உள்ளயும் பூந்துக்கிட்டான்

சொல்லு புள்ள இப்பவே கட்டிக்கவா
சொக்க வச்ச உன்னையும் தொட்டுக்கவா
சொர்க்கத்தை இங்கே கூட்டிகிட்டு வாரேன்
தேனாக சோறாக
சேர்த்திட்டு போறேன்

என் ஆசை வாழைக்குருத்தே
நீ இப்போது எங்க இருக்க
ராத்திரி நேரத்தில
ஊரடங்கி தூங்குற சாமத்தில

ஏக்கம் புடிச்சுது
தூக்கம் புடிக்கல
என்னத்த நானும் சொல்ல

என் ரெண்டு கண்ணும் சிவந்தது
எண்ணம் துடிச்சது
வேறென்ன நானும் சொல்ல


வெள்ளி முளச்சது வானம் சிரிச்சது
இன்னைக்கு காலையில
உன்னை எண்ணி ஏங்கிற வேளையில
முல்லை மணத்தது எண்ணம் கலந்தது
சந்தன சோலையில
வாசம் மட்டும் எண்ணிய சேலையில

அக்கம் பக்கம் ஆளுங்க யாருமில்லே
வெட்கம் என்ன வேதனை தீருமில்லே
கட்டிக்க ஒண்ணு தொட்டுக்க ஒண்ணு
தாகத்தை வேகத்தை காட்டிட பொண்ணு

என் ஆசை வாழைக்குருத்தே
நீ இப்போது எங்க இருக்க
ராத்திரி நேரத்தில
ஊரடங்கி தூங்குற சாமத்தில

ஏக்கம் புடிச்சுது
தூக்கம் புடிக்கல
என்னத்த நானும் சொல்ல

என் ரெண்டு கண்ணும் சிவந்தது
எண்ணம் துடிச்சது
வேறென்ன நானும் சொல்ல

என் ஆசை வாழைக்குருத்தே
நீ இப்போது எங்க இருக்க